நமக்காக உண்டாக்கப்பட்ட தேவனுடைய பாதை Jeffersonville, Indiana, USA 52-0900 1இப்பொழுது ஒன்று சேர்ந்து உயரே தூக்கிப் பிடிப்போம் இப்பொழுது உண்மையாகவே பெரியது. ஆச்சரியமான கிருபை! எவ்வளவு இனிமையாக ஒலிக்கிறது அது என்னைப் போன்ற ஈனனை இரட்சித்தது, ஒருசமயம் நான் இழக்கப்பட்டவனாயிருந்தேன், ஆனால் இப்போதோ நான் கண்டுபிடிக்கப்பட்டேன், குருடனாயிருந்தேன், ஆனால் இப்போதோ காண்கிறேன் நம்முடைய தலைகளை இப்பொழுது வணங்குவோம். எங்களுடைய பரலோக பிதாவே, நாங்கள் உம்மிடத்தில் வருவதற்கு எங்களுக்கு இருக்கின்ற மகத்தான சிலாக்கியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். முதலாவதாக கிறிஸ்துவால் அல்லாமல் எங்களால் வரமுடியாது. அதனால் எங்களுடைய ஜெபங்களுக்கு முன்னதாக நாங்கள் அவருடைய நாமத்தை வைக்கிறோம். பின்னர் நீர் அதற்கு பதிலளிப்பீர் என்பதை அவருடைய வார்த்தையினால் அறிந்து அவருடைய நாமத்தினால் நாங்கள் கேட்கிறோம். எங்களுடைய சொந்த நீதி கிடையாது. நாங்கள் செய்யத்தக்கதாக நாங்கள் ஒன்றையும் உடையவர்களாய் இல்லை. ஆனால் கிருபையினால் மட்டுமே நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்டுக் கொண்டு வருகிறோம். பிதாவே இங்கே இந்தக் கட்டிடத்தை சுற்றிலும் அனேக புருஷர்களும், ஸ்திரீகளும் இருக்கிறார்கள். அவர்கள் பாவிகளாய் இருக்கிறார்கள். நீர் பாவிகளுக்காக மரிக்கவே மரித்தீர். அவர்களுடைய இருதயத்தில் தேவன் பேசி அவருடைய கிருபையினால் அவர்களை இராஜ்ஜியத்திற்குள்ளாக அழைக்கின்ற இரவு இந்த இரவாக இருப்பதாக. இதையளியும் கர்த்தாவே. பாவத்தில் அலைந்து திரிந்து ஒருக்கால் அனேக பல வருடங்களை அவர்கள் வீணாகக் கழித்திருக்கலாம். ஆனால் இது அந்த வேளையாக இருப்பதாக. 2கர்த்தாவே பில்லிபாலுக்காக இன்றிரவு உமக்கு நன்றி. என்னுடைய, பாவமான சிறிய தாயில்லாத பையன் அலைக்கழிக்கப்படுகிறான். அவனுக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை தந்ததற்காக உமக்கு நன்றி கர்த்தாவே, ஒரு மகிமையின் நாளன்று நாங்கள் அவனுடைய அம்மாவை மீண்டும் காண்போம், எல்லாக் காரியமும் சரியாகி விடும். ஓ, தேவனே தூதர்கள் அவள் இதை அறிந்து கொள்ளும்படி, அவளுக்கு இன்று இதைக் கூறுவார்களாக. அவ்வண்ணமாகவே அவளுடைய மரணத்திலே அவள் தேவனுக்கு சேவை செய் என்றாவது பில்லிபால் ஒரு புருஷனாக இருந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வான் என்று அழுதாள், ஜெபங்களுக்கு பதில் அளிக்கப்படுகின்றன. தேவனே சிறுவனை இப்பொழுது ஆசீர்வதியும். ஆண்டவரின் அடிச்சுவடுகளில் அவன் பின் தொடர்ந்து போவானாக. அவன் என்னிடத்தில் அப்பா நான் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டேன், நான் அவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன் என்று கூறினபோது அவனுடைய சிறிய சத்தம் எப்படியாய் நடுங்கினது. தேவனே இன்றிரவு இங்கே உள்ள ஒவ்வொரு மறுபடியும் பிறவாதவர்களுடைய அனுபவம் அதுவாக இருப்பதாக அவர்கள் தாமே இன்றிரவு பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வார்களாக. நாங்கள் ஏதாவது பாவம் செய்திருந்தால் கர்த்தாவே எங்களுக்கு மன்னியும், வியாதியஸ்தரை சுகப்படுத்தும், நொறுங்குண்ட இருதயத்தைக் கட்டும். இப்பொழுது கர்த்தாவே இன்றிரவு பேசுவதற்கு எங்கே துவங்குவது என்று எனக்குத் தெரியவில்லை . ஆனால் நீர் அதை அளிப்பீர். நான் உம்மை விசுவாசிக்கிறேன். ஜனங்களுக்கு ஏதாவது உதவி செய்யக்கூடிய காரியத்தை நீர் எங்களுக்குக் கொடுக்கும்படியாய் நான் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3ஒருசிறு வேதவாசிப்பிற்காக ஏசாயா 35-ல் இருந்து வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் என்னுடைய வார்த்தை தவறிப்போகும். ஆனால், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போகாது. ஆகையினால் வேதவார்த்தைகளை முதலாவது வாசிக்காமல் எந்த ஆராதனையும் முழுமையாய் இருக்காது. ''வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து : நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும். அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை ; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்ட மிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.“ 4அவருடைய வார்த்தையின் வாசிப்போடு கர்த்தர் தாமே அவருடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. கர்த்தருக்குச் சித்தமானால் நான் இன்றிரவு ஒருசில நிமிடங்கள் உங்களோடு பேசவிரும்புகிறேன். இன்றிரவு உங்களை அதிக நேரம் காக்க வைக்காதபடி என்னுடைய கடிகாரத்தை நான் கவனித்துக்கொண்டே இருப்பேன். 5இந்த வாரத்தின் ஆராதனைகளினூடாக, பயந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஜனங்களுக்குக் காட்ட முயற்சிக்கிறேன். பிசாசு உங்கள் மேல் வைக்கக்கூடிய மிகவும் மோசமான காரியம் பயமாக இருக்கிறது. உங்களுக்கு புற்றுநோய் இருந்தும் பயப்படாமல் தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசித்தால் நீங்கள் அதிக மோசமான ஒரு நிலையில் இருக்கமாட்டீர்கள், தேவன் அதைப் பார்த்துக்கொள்வார். நீங்கள் சுகவீனமாய் இருந்து அது என்னவாக இருந்தாலும் பயப்படாமல் இருந்தால் போதும். எனவே பிசாசு ஒரு நபரின் மேல் பொருத்தக்கூடிய மிகவும் மோசமான காரியத்தில் பயம் ஒன்றாக இருக்கிறது. தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக மறுபடியும் பிறந்த மனிதனுக்கு பயப்படுவதற்கு ஒரு காரியமும் இல்லையென்று வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க இந்த வாரம் நான் முயற்சித்தேன். இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக நீங்கள் முற்றிலுமாக பத்திரமாக, பாதுகாவலாய் இருக்கிறீர்கள். “பிதா எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்” என்று அவர் சொன்னார். பிதா அழைக்காமல் ஒருவனும் என்னிடத்தில் வரான். பிதாவானவர் அவனை என்னிடம் மட்டுமாய் வழிநடத்தியாக வேண்டும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. “என் பிதாவின் கரங்களில் இருந்து அவர்களை ஒருவனாலும் பறிக்க முடியாது” அவரைக் காட்டிலும் மகத்தான ஒரு மனிதனும் இல்லை . என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டு இருக்கிறான், என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான், உடையவனாய் இருப்பான் என்றல்ல, உடையவனாய் இருக்கிறான். நிகழ்காலம் ஜீவனையுடையவனாய் இருக்கிறான். நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். “ஆகையினால் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாய்ப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” அங்கேதான் காரியம், மீட்கப்படும் நாள் வரைக்குமாய் முத்தரிக்கப்பட்டது. ஒரு எழுப்புதலில் இருந்து மறு எழுப்புதல் வரைக்கும் அல்ல, ஆனால் உங்களுடைய மீட்கப்படும் நாள் வரைக்கும் 6என்னே! பரிசுத்த ஆவியானவர் அப்படியாய் இந்தக் காலை உள்ளே வந்து அதன்மேல் நம்மை ஆசீர்வதித்தார். இங்கே இந்தக் காலையில் 9:30 மணிமுதல் 01:30 மணிவரை எங்களைக் காத்துக்கொண்டார். இப்படியாய் எங்களை ஆசீர்வதித்தார். இப்பொழுது இன்றிரவு நான் ஏசாயா இங்கே, அங்கே பெரும் பாதையான வழியும் இருக்கும் அது பரிசுத்த வழி என்னப்படும் என்று கூறினான். இப்பொழுது நான் தேவனுடைய பாதை “நமக்காக உண்டாக்கப்பட்ட தேவனுடைய பாதை” என்பதின் பேரில் பேசவிருக்கிறேன். 7இப்பொழுது நான் நியூயார்க் பட்டணத்திற்கு போவதாய் இருந்தால் நான் செய்யக்கூடிய மேலான காரியம், எப்படி வடக்கு நோக்கி போகவேண்டும் என்று நான் கண்டறிய முயற்சிக்கக் கூடாது. பூலோகப் பிரகாரமாக நான் எங்கு வைக்கப்படுகிறேன் எனப்பார்க்க வேண்டும். ஆனால் அதைச் செய்யக்கூடிய மேலான வழி ஒரு தேச வரைபடத்தை எடுத்துக்கொண்டு அந்த வரைபடத்தைப் பின்பற்ற வேண்டும். (அதுசரியா!) ஒரு பெரும்பாதையைத் தொடர்ந்து செல்ல வேண்டும். நான் அப்படிச் செய்யவில்லையென்றால் நான் தொல்லைக் குள்ளாவேன். தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு அங்கே எந்த குறுக்கு வழியும் கிடையாது. நாம் ஒரு குறுக்கு வழியை உண்டாக்க முயற்சிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் இங்கே எங்கேயோ வெளியே ஒரு குட்டைக்குள் வந்து விழுகின்றோம். தேவனுடைய கம்பீரமான பழைய பெரும்பாதையை விட்டு நாம் விலகும்போது நாம் அதைத்தான் செய்கிறோம். தேவன் ஒரு வழியையும், ஒரு பாதையையும் உண்டு பண்ணினார். 8எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் பிள்ளைகள் வெளியே வந்த போது அவர்கள் தேவனுடைய பாதையைப் பின் தொடர்ந்தனர். அது சிவந்த சமூத்திரமட்டுமாய் நடத்தியது. அந்த வழியாக தேவன் அவருடைய பாதையை வழிநடத்துவார் என்றால் அது விநோதமாய் இருக்கின்றது. ஆனால் அவருடைய பாதையோ நேராக கடலினூடாகச் சென்றது. எனவே நேரமும் சவாலும் வந்தபோது, இஸ்ரவேல் அங்கே செங்கடலுக்கு முன்பாக நின்றார்கள். தேவனுடைய பாதை சமூத்திரத்தினூடாக வழி நடத்தியது. எனவே தேவன் அக்கினி ஸ்தம்பத்தினூடாக நோக்கிக் கீழே பார்த்தார். கடலானது பயங்கொண்டு பின்னிட்டு விலகிப் போனது. இஸ்ரவேலர் உலர்ந்த தரையினூடாக கடந்து சென்றனர். தேவனுடைய பாதை அதனூடாக வழிநடத்தியது. 9பின்னர் அவர் நேராக வனாந்திர மட்டுமாய்ச் சென்று மாராவின் கசப்பான நீர் ஊற்றுக்குள் சென்றார். தேவன் அவருடைய பிள்ளைகளை கசப்பான தண்ணீர்களினூடாக நடத்தினார் என்பது வினோதமாய் இல்லையா? ஆனால் அவையெல்லாம் பாதையினூடாகப் போகிறது. ஆனால் அவர் அங்கே இருக்கும் பொழுது கசப்பான தண்ணீருக்கான பரிகாரமானது அங்கே கரையில் நின்று கொண்டு இருந்தது. மோசே ஒரு மரத்தை வெட்டி அதைத் தண்ணீரில் தூக்கியெறிந்தான், அது மீண்டும் மதுரமாக மாறிற்று. தண்ணீரினூடாக சிலரையும், வெள்ளத்தினூடாக சிலரையும், ஆழமான சோதனையினூடாக சிலரையும் ஆனால் எல்லோரையும் இரத்தத்தினூடாக நடத்துகிறார். அந்தவிதமாகத்தான் தேவன் அவருடைய பிள்ளைகளை நடத்துகிறார். தேவனுடைய பாதை, தேவனுடைய அளிக்கப்பட்ட பாதை. இஸ்ரவேலரின் பிள்ளைகள் அதை விட்டுவிட்டு சுற்றிக்கொண்டு இந்த வழியாகப் போக பிரயாசித்தால் அவர்கள் தொல்லைக்குள் ஆகியிருப்பார்கள். அவர்களை வழிநடத்திய மேகஸ்தம்பத்தையும், அக்கினி ஸ்தம்பத்தையும் அவர்கள் பின் தொடர்ந்து போகவேண்டியதாய் இருந்தது. அவர்கள் அதைப் பின் தொடர்ந்தார்கள். சபையானது இன்றிரவு அக்கினி ஸ்தம்பத்தை அதாவது பரிசுத்த ஆவியை மாத்திரம் பின் தொடர்ந்து சென்றால், எந்த காரியத்தைப் போன்றும் அவ்வளவு நிச்சயமாய் கானானை அடையும். தேவன் ஒரு வழியை, தேவன் ஒரு அளிக்கப்பட்ட வழியை உடையவராய் இருக்கிறார். 10மனிதனுக்கு போகத்தக்கதாக அங்கே இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அவனுடைய வழி, அல்லது தேவனுடைய வழியாக இருக்கின்றது. அது சரியான வழி அல்லது தவறான வழியாய் இருக்கிறது. உங்களுடைய வழி எப்போதும் தவறான வழியாகவும், தேவனுடைய வழி சரியான வழியாகவும் இருக்கும். உங்களுடைய சொந்த வழியிலும் அதே நேரத்தில் தேவனுடைய வழியிலும் உங்களால் இருக்க முடியாது. ஆகையினால் நீங்கள் உங்களுடைய வழியை விட்டு வெளியே வந்தாக வேண்டும். அதனால் தேவன் அவருடைய வழியை உங்களுக்கு உடையவராய் இருக்க முடியும். அதுசரியே. தேவன் ஒரு அளிக்கப்பட்ட வழியை உண்டு பண்ணுகிறார். மனிதன் அவனுடைய சொந்த வழியை உண்டு பண்ணவே எப்பொழுதுமே விரும்புகிறான். ஏதேன் தோட்டத்தில் தேவன் மனிதனை உண்டாக்கினார். அதனால் எந்தக் காரியத்திற்காகவும் அவன் மாற்றிக்கொள்ள வேண்டிய தில்லை. தேவன் அவனைப் பரிபூரணமாய் உண்டாக்கினார். ஆனால் மனிதனோ அவனுடைய சொந்த வழியை உடையவனாய் இருக்க விரும்புகிறான். அதை மாற்ற விரும்புகிறான். அவன் கண்டறிந்து கொள்ள விரும்புகிறான். பின்னர் அவன் விழுந்தவுடன் வேதவார்த்தைகளின் ஆராய்ச்சியில் நாம் கடந்த வாரம் அதனூடாக சென்று பார்த்தோம். அவன் தனக்கென்று ஒரு மார்க்கத்தை உண்டு பண்ணிக்கொண்டான், தேவன் அவனுக்கு ஒன்றை உண்டுபண்ணும் வரைக்கும் அவன் காத்துக்கொண்டிருக்க வில்லை. அவன் தானாகவே ஒன்றை உண்டு பண்ணிக்கொண்டான். ஆனால் அவனுடைய மார்க்கம் அவனுடைய போர்வை கிரியை செய்யாது என்பதை அவன் கண்டறிந்தான். மனிதன் எப்பொழுதும் அந்தவிதமாகத்தான் இருந்து வருகிறான். அவனுடைய சொந்த வழி அவனுக்குத் தேவையாய் இருந்தது. ஆனால் தேவனோ ஒரு வழியை உடையவராய் இருந்தார். எனவே மனிதன் அத்தி இலைகளைத் தைத்து அவன் மேலும் அவனுடைய மனைவியின் மேலும் மூடிக்கொண்டான். ஆனால் அவன் தேவனை சந்திக்கும்படியாய் வந்தபோது அது கிரியை செய்யாது. என்பதை அவன் அறிந்து கொண்டான். நண்பர்களே! நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இன்றிரவு அனேக மனிதர்கள் இருந்திருக்கிறார்கள், இன்றைக்கும் இருக்கிறார்கள். அது பாதையின் முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பற்றிக் கொண்டிருக்கிற அந்த சிறிய ஆழமில்லாத மார்க்கமானது கிரியை செய்யாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மறுபடியும் பிறப்பது என்பதற்குக் குறைவானது ஒன்றும் கிரியை செய்யாது. ஒரு மனிதன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று இயேசு கூறினார். எந்த விதத்திலும் அவன் மெத்தொடிஸ்டோ அல்லது பாப்டிஸ்டோ, பிரஸ்பிடேரியனோ அவன் என்னவாக இருந்தாலும் கவலையில்லை, அவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறக்கும் வரைக்கும் அவன் பிரவேசிக்கமாட்டான். பிறக்குதல் என்றால் அவன் மாறியிருக்கிறான் என்று அர்த்தம். பிறப்பதற்கு முன்னால் அவன் மரித்தாக வேண்டும். எனவே நீங்கள் உங்களுக்குத் தானே மரித்து மீண்டுமாய் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாய் மறுபடியுமாய் பிறந்திருக்க வேண்டும். அதுசரியே! 11இப்பொழுது அவனுடைய வழியை அவனாகவே செய்ய முயற்சிக்கிறவனாய் அவன் காணப்பட்டான் என்பதை நீங்கள் இப்பொழுது கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காயீன் அப்படி தன்னுடைய வழியை உண்டுபண்ண முயற்சித்தான் என்பதை இன்று காலையில் நாம் தியானித்தோம். அவன் சில ஆப்பிள் பழங்களையும், பேரிச்சை பழங்களையும், பீச்சீஸ் பழங்களையும், பூசணியையும் அது வேறென்னவாக இருந்ததோ அதையெல்லாம் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் கிடத்தி, “இப்பொழுது கர்த்தாவே நான் அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினேன், நான் ஒரு சபையைக் கட்டினேன், நான் ஒரு நல்ல சபை அங்கத்தினன், புரிகின்றதா? நான் ஒவ்வொரு நாளும் சபைக்குப் போகிறேன், நான் இங்கே வந்து பலிபீடத்தைக் கட்டினேன், பலியை அதன்மேல் வைத்தேன், இப்பொழுது நான் முழங்கால் படியிட்டு ஜெபிக்கப்போகிறேன், இப்பொழுது கர்த்தாவே, நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். ஆனால் தேவனோ அவனை மறுத்துவிட்டார். அந்த அதே பழைய தேவ பக்தியின் ஆவி இன்றைக்கு சபையின் மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. அதே காரியம் அது இருக்கக்கூடிய அளவிற்கு அதே தேவபக்தி பழங்குடி காட்டுவாசியானவன் எந்தளவு எகிப்தின் இரவுகள் கதையை அறிந்திருக்கக்கூடுமோ, அதற்கு மேல் தேவனைக்குறித்து அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அது உண்மையென்று உங்களுக்கு தெரியும். தேவபக்தி உள்ள ஆவிகள். ஸ்டாலின் அந்தி கிறிஸ்து என்று நினையாதிருங்கள், அந்த இரண்டு ஆவியும் அவ்வளவு நெருக்கமாய் இருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக இருக்கும் என்று வேதம் கூறுகிறது. 12யூதாஸ்காரியோத்து வந்தான், வெளியே சென்றான், களிகூர்ந்தான், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான், திரும்பி வந்து கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும் மற்ற சீஷர்களுடன் அவனுக்கு ஒரு பெரிய நேரம் இருந்தது. பரிசுத்த மத்தேயு 10-ஆம் அதிகாரம். அவன் சீஷர்களைக் கடைசி வரையிலும் தொடர்ந்து சென்றான். இருந்தும் மனித மாம்சத்தில் பிசாசாக இருந்தான். தொடர்ந்து சென்றான், இயேசுவானவர் மனித மாம்சத்தில் தேவனாக இருந்தது போன்று, ஏதேன் தோட்டத்தில் இருந்து காயீனும், ஆபேலும் இருந்தது போன்று இருந்தான். ஆனால் பெந்தெகொஸ்திற்கு மேலே சென்று ஆசீர்வாதத்தைப் பெறவேண்டிய நேரம் அவனுக்கு வந்தபோது அவனுடைய சொந்த நிறத்தை அவன் காண்பித்தான். மறுபடியுமாய் பிறப்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வது போன்றதான காரியத்தைக் குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருங்கள், ஒவ்வொரு பத்திற்கும் ஒன்பது முறைகள் அந்த ஆவிகள் அதன் நிறத்தை அவர்கள் யார் என்பதைக் காட்டிவிடும். “அவர்கள் ஒரு மதவெறித்தனம் கொண்ட கூட்டம் அதைவிட்டு விலகுங்கள்” என்று கூறுவார்கள். சகோதரனே அது இன்றைக்கு மனிதனுக்குத் தேவனுடைய அளிக்கப்பட்ட வழியாய் இருக்கிறது. அல்லேலூயா! 13கவனியுங்கள். தேவன் எப்பொழுதும் ஒரு அளிக்கப்பட்ட வழியை உண்டாக்கியிருக்கிறார். தேவன் ஒரு வழியை உண்டு பண்ண கடமைப்பட்டவராய் இருக்கிறார். தேவன் இயற்கைக்கு ஒரு வழியை உண்டுபண்ணுகிறார், நமக்கு தேசத்தின் ஊடாக, ஏன் பெரிய வெள்ளங்கள் வருகிறது? எல்லா மரங்களையும் அதைப்போன்று காரியங்களையும் வெட்டிப்போட்டு அது அடித்துக்கொண்டு போகும்படி விரும்புகிறோம். நீங்கள் ஒரு அணையைக் கட்டி நீர்தேக்கங்களை நிரப்புகிறீர்கள். தண்ணீர் அதோ போகின்றது, நீங்கள் இயற்கையோடு குறுக்கிடுகிறீர்கள். தேவன் ஒரு அளிக்கப்பட்ட வழியை உடையவராய் இருக்கிறார், அதுதான் வெள்ளங்களுக்குக் காரணமாய் இருக்கிறது. தேவன் பரிபூரணமாய் உண்டாக்கியிருக்கிற எந்தக் காரியத்திலும் மனிதன் நுழையும்போது, நீங்கள் அதை பரிபூரணமற்றதாய் ஆக்குகிறீர்கள், அதுசரியே! 14இப்பொழுது உதாரணமாக அது வாத்துக்களைப் போன்றதே. அதன் காலத்திலே நான் வேட்டைக்காக மலையின் மேல் போகும்போது எனக்கு வாத்துக்களை கவனிப்பதில் பிரியம். வருடத்தின் இலையுதிர் காலத்தின் போது, நான் இங்கே உயரே இருப்பேன். நல்லது அங்கே வாத்துக்கள் எல்லாம் லூசியானாவில் இருந்து அங்கே உள்ள சதுப்பு நிலங்களுக்கு வரும். அவைகள் வடக்கே சென்று அங்கே தங்கியிருந்து கூடுகட்டி, வாத்துக்குஞ்சுகளை பொறித்து வளர்கின்றன. அதன்பிறகு அந்தக் குஞ்சுகள் எழும்பி ஒருவேளை அவைகள் செப்டம்பர் போல் வந்து வருடத்தின் இந்த நேரத்தில் அல்லது செப்டம்பர் கடைசியில் வரும். பின்னர் அந்த சிறிய ஆண் வாத்தானது அந்தக் குளத்தைவிட்டு வெளியே போனதே கிடையாது. அது சரியாக இந்த குட்டையிலேயே இருக்கிறது. கொஞ்சம் கழித்து உறைபனி மலையின் உச்சியில் காணப்படும். பனி அங்கே உயரே பெய்யத் துவங்குகிறது, குளிர்ந்த காற்று மலையினூடாக வீசுகின்றது. அந்த சிறிய வாத்து அதை உணர்ந்து கொள்கிறது. அந்த வாத்து அந்த குட்டையில் இருந்ததே ஒழிய வேறு எங்கேயும் போனது கிடையாது. அதற்கு இன்னும் வயது ஒருவருடம் கூட ஆகவில்லை, அது தன்னுடைய தலையை ஆகாயத்தை நோக்கி நீட்டுகிறது. அந்தச் சிறிய வாத்து நேராக அந்த குட்டையின் மத்தியில் சென்று ஹாங்க் ஹாங்க் என்று சத்தமிட எல்லா வாத்துக்களும் அதனிடமாய் நெருங்கும். அந்தக் குட்டையில் இருக்கும் ஒவ்வொரு வாத்தும் அது தலைவனாய் இருக்கப் பிறந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அந்தச் சிறிய வாத்தானது திசைகாட்டும் கருவி அல்லது எந்தக் கருவியும் இல்லாமல் குட்டையைவிட்டு எழும்பி உயரே பறக்கும். நேராக லூசியானாவில் உள்ள நெல் வயல்களுக்குப் போக தெரிந்தது போல் போகும். 15கிறிஸ்தவர்களுக்கு எப்படியானாலும் அந்த வாத்தின் புலன் இருந்தாக வேண்டும் என தோன்றுகிறதா? அப்படியாய் அது. இல்லையா? அது சரியே! ஏன்? அது இயற்கையான சுபாவம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், இல்லை அவைகள் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் செல்கின்றன. தேவன் அவைகளுக்கு ஒரு வழியைக் கொடுத்து, அங்கே அவைகளை நடத்திக் கொண்டு போக ஒரு இயற்கையான சுபாவத்தையும் கொடுத்தார். அவைகள் அதை விசுவாசிக்கின்றன. ஆனால் தேவன் மனிதனுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். அவன் அதைப் புறக்கணித்து அவனுடைய சொந்த வழியை உடையவனாய் இருக்கிறான். ஆனால் தேவன் நமக்கு ஒரு அளிக்கப்பட்ட பாதையை உடையவராய் இருக்கிறார். அல்லேலூயா! இதற்குப் பிறகும், அந்த சில எழுப்புதல் இரவுகளுக்குப் பிறகும் இன்றிரவு நான் ஒருவிதமாக பரவசமாக உணருகிறேன். அதோ அது இருக்கிறதை கவனியுங்கள். ஆம் ஐயா. அந்த சிறிய வாத்து அங்கே கீழே போகும். 16நான் இன்னொரு காரியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் போய் அங்கே ஒரு செய்தித்தாளைப் பார்த்து நாளைக்கு சீதோஷ்ணம் மிகவும் நன்றாக இருக்கப்போகின்றது என்று கூறுவீர்கள். நீங்கள் வேட்டைக்குச் சென்றால் முயல்கள் புற்களில் வந்து அடங்குவதைக் கவனிப்பீர்கள். நீங்கள் அந்த தினசரி பத்திரிக்கைகளில் சிரத்தைக் கொள்ளமாட்டீர்கள். அந்த பழைய பெண் பன்றி குன்றின் வடக்குப் பக்கத்தில் இருந்து மேலுறைகளை எடுத்துக்கொண்டு தெற்குப் பக்கமாகக் கொண்டு செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். குன்றின் தெற்குப் பக்கத்தில் போய் அதற்கு ஒரு மெத்தையை உண்டுபண்ணிக் கொள்ளும். உலகத்தில் உள்ள செய்தித் தாள்களின் விமர்சனங்களைவிட அதைக்குறித்து அவைகள் அதிகமாக அறிந்திருக்கின்றன. அவளுக்கு ஒரு இயற்கையான சுபாவம் இருக்கிறது. அந்தக் குளுமையான காற்று கீழே நோக்கி வருகிறதில் இருந்து மறைந்து கொள்வதற்கு அவள் சுற்றிக்கொண்டு தெற்கு பக்கம் போகிறாள். ஓ, என்னே (சகோதரன்.பிரன்ஹாம் பிரசங்கபீடத்தை அநேகமுறை தட்டுகிறார்) 17காற்றிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ள ஒரு காட்டுப் பன்றிக்கு அறிவு இருக்குமானால், பரிசுத்த ஆவியை உடையவனாய் இருக்கிற உன்னைக் குறித்து என்ன? அல்லேலூயா! அதுதான் உங்களுடைய சுபாவமாக இருக்கிறது. ஆம், ஐயா. தேவன் அவைகளுக்கு ஒரு இயற்கையான சுபாவத்தைக் கொடுத்திருக்கிறார் அது அவைகளுக்கு தேவனால் அளிக்கப்பட்ட ஒரு பாதையாக இருக்கிறது. அவைகள் தேவனுடைய அளிக்கப்பட்ட ஒரு பாதையில் ஜீவிக்கின்றன. நீங்கள் ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்கள். அது மரிக்கும் போது, அது பூமிக்குள்ளாக போகிறது. அது அதனுடைய முடிவல்ல. அது மீண்டுமாய் ஜீவிக்கிறது. தேவன் அதற்கு ஒரு அளிக்கப்பட்ட பாதையைக் கொடுத்திருக்கிறார். அதில் அதற்கு விசுவாசம் இருக்கிறது. 18தேவன் எப்பொழுதுமே ஒரு அளிக்கப்பட்ட பாதையை உண்டுபண்ணுகிறார், சில நேரங்களில் இன்பகரமான காரியங்களினூடாக அது கொண்டு போகிறதில்லை. சில சமயங்களில் அது கஷ்டங்களினூடாகக் கொண்டு போகிறது, ஆனால் அது தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறது. எப்படி இருந்தாலும் தேவன் அதை உண்டுபண்ணுகிறார். ஒரு சமயம் அவருடைய அளிக்கப்பட்ட பாதையில் அவர் ஒரு மனிதனை உடையவராய் இருந்தார். அவன் ஒரு சிங்க கெபியினூடாக போக வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவன் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் சென்றான். தேவன் அவனை மீண்டுமாய் வெளியே கொண்டு வந்தார். அல்லேலூயா! 19தேவன் எப்பொழுதுமே ஒரு அளிக்கப்பட்ட பாதையை உண்டுபண்ணுகிறார், சில நேரங்களில் இன்பகரமான காரியங்களினூடாக அது கொண்டு போகிறதில்லை. சில சமயங்களில் அது கஷ்டங்களினூடாகக் கொண்டு போகிறது, ஆனால் அது தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறது. எப்படி இருந்தாலும் தேவன் அதை உண்டுபண்ணுகிறார். ஒரு சமயம் அவருடைய அளிக்கப்பட்ட பாதையில் அவர் ஒரு மனிதனை உடையவராய் இருந்தார். அவன் ஒரு சிங்க கெபியினூடாக போக வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவன் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் சென்றான். தேவன் அவனை மீண்டுமாய் வெளியே கொண்டு வந்தார். அல்லேலூயா! 20ஒருநாள் காலையில் பாபிலோனில் சில எபிரேய பிள்ளைகள் அங்கே உட்கார்ந்திருந்ததை என்னால் காணமுடிகிறது. அவர்கள் ஒரு விக்கிரகத்திற்குத் தலைவணங்க மறுத்தனர். அது சரியே! அவர்கள், “நாங்கள் அதைச் செய்ய மாட்டோம், உங்களுக்கு வேண்டிய எல்லா வாத்திய இசையையும் வாசியுங்கள், உங்களுடைய சுரமண்டலங்களையும், எக்காளங்களையும் முழங்குங்கள், ஆனால் நாங்கள் உங்களுடைய விக்கிரகத்திற்குத் தலைவணங்க மாட்டோம்,” என்றார்கள். அல்லேலூயா! உலகப்பிரகாரமான காரியங்களுக்குத் தலைவணங்காத இன்னும் சில சாத்ராக், மேஷாக், ஆபேத்னேக்கோக்களை எங்களுக்குத் தாரும். ஆம் ஐயா. அதற்கு நாங்கள் பணிய வேண்டியதாய் இருக்காது. தேவன் நம்மைப் பரிசுத்த ஆவியினால் சுயாதீனராய் உண்டு பண்ணியிருக்கிறார், அல்லேலூயா! ஆம், ஐயா. என்னால் இப்போது ஒரு காலை வேளையில் அங்கே கீழே நோக்கிப் பார்க்க முடிகிறது. இப்போது நாம் நம்முடைய புகைப்பட கருவியைக் கீழாகத் திருப்பி ஒரு நிமிடம் கவனித்துப் பார்ப்போம். ஒரு காலையில் என்னால் அந்த பையன்களை கீழ் நோக்கிப் பார்க்க முடிகிறது. அவர்கள், இப்போது கவனியுங்கள், ராஜா, “தலைவணங்காத யாவரையும் நாங்கள் பற்றி எரிகின்ற அக்கினிச் சூளையிலே தூக்கி எறியப் போகிறோம்”, என்று கூறினார். அவர்கள் போய் ஒரு இரவு முழுவதுமாய் ஜெபித்தார்கள். அடுத்த நாள் அந்த சிலைக்கு முன்பாக அவர்கள் தலைகளை வணங்குவதற்கான முழக்கம் வந்தது, ஏன் அவர்கள் அதற்குத் திரும்பி முதுகைக் காட்டினார்கள். எனவே அவன் அப்படியே திரும்பி வந்து பையன்களா நீங்கள் அதைச் செய்தீர்களா என்றான். ஆம், என்றார்கள். “நல்லது இப்போது நாங்கள் அதை இதற்கு முன்னதாக இருந்ததைக் காட்டிலும் ஏழுமடங்கு சூடாக்கப் போகிறோம்” என்றார்கள். 21இப்போது அது விநோதமாய் இல்லையா? அந்த அக்கினி ஜூவாலையினுலுக்குப் போகும் வரைக்குமாய் அங்கே ஒரு மேடை வைக்கப் பட்டிருந்தது. பாபிலோன் முழுவதிலுமாய் அந்தக் காலையில் சிவப்பாக இருந்தது. அக்கினி கர்ஜித்துக்கொண்டிருந்தது. இன்றைய ஒரு நவீன மனிதனாய் நேபுகாத்நேச்சார் ராஜாவை என்னால் காணமுடிகிறது. அவன் அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டு இப்போது நாம் அந்த அந்த நபர்களிலிருந்து எல்லாக் காரியங்களின் பரிசுத்த ஆவி மார்க்கத்தையும் எடுத்துப் போடுவோம் என்றான். 22ஓ, ஆம் பிசாசு உங்களை எரித்துப் போடமுடியாது என்பதை நினையாமலிருக்கிறீர்களா? ஆனால் நினைவிருக்கட்டும் பரிசுத்த ஆவியே தன்னில் தானே அக்கினியாய் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவனுடைய பாதையானது அந்த மேடை வரைக்குமாய் நடத்தியது. என்னால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மரண பவனியில் நடப்பதைக் காணமுடிகிறது. சாத்ராக், “ஆபேத்நேகோ நீ தொடர்ந்து ஜெபித்தாயா” என்று கூறுகிறதை என்னால் கேட்கமுடிகிறது, ஆம் என்றான். அப்படியானால் சரி என்றான். நீங்கள் தேவனுடைய பாதையில் இருக்கிறீர்கள் என்று நிச்சயமாய்த் தெரியுமா? “ஆம் ஐயா, நாங்கள் விக்கிரகத்திற்குத் தலை வணங்கக்கூடாது என்று தேவன் அவருடைய வார்த்தையில் கூறியிருக்கிறார், நாங்கள் அதைச் செய்யமாட்டோம். இந்த எரிகிற அக்கினிச் சூளையில் இருந்து எங்களை விடுவிக்க தேவன் வல்லவராய் இருக்கிறார், ஆனால் அவர் எங்களை விடுவியாமல் போனாலும் அதனால் என்ன? நாங்கள் தலைவணங்கப் போவதில்லை, நாங்கள் தேவனுடைய பாதையில் போகின்றோம்”, என்றார்கள். யாரோ ஒருவர், “அவருடைய அளிக்கப்பட்ட பாதையை நீ உடையவனாய் இருக்கிறாய் என்று நிச்சயமாய்த் தெரியுமா?” என்று கூறுகிறதை என்னால் கேட்கமுடிகிறது, ஆம் அல்லேலூயா சிலர், “உங்களைத்தவிர மற்ற அந்த எல்லா ஜனங்களும் சரியாய் இருக்கக் கூடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா”, என்றார்கள். “இல்லை ஐயா, வேதாகமம் அந்த விதமாக கூறுகிறது, நாங்கள் அதனோடு சேர்ந்து நிற்கிறோம்”, என்றார்கள். அவர்கள் நேராக அந்தச் சூளையின் மேடையின் மேல் போகிறார்கள், உஷ்ணம் அதிகமாய் இருந்தது. அந்தக் கடுமையான உஷ்ணமானது அவர்களை அழைத்துக் கொண்டுவந்த மனிதர்களைக் கொன்று போட்டது. அவர்கள் உள்ளே அடியெடுத்து வைக்க ஆயத்தமாய் இருந்தார்கள். தேவன் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர்கள் இன்னமும் அளிக்கப்பட்ட பாதையிலேயே போய்க்கொண்டு இருந்தார்கள். நேராக நடந்து அவர்கள் சூளையின் வாயிலுக்கே சென்றார்கள், அவர்கள் அந்த அக்கினிச் சூளைக்குள்ளே நுழைய ஆயத்தமாய் இருந்தார்கள். நான் ஒரு பயங்கரமான கருப்புப் படத்தை இப்போது எனக்கு முன்னால் வைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், தேவனுக்கு உண்மையாக ஜீவிக்க முயற்சி செய்கிற மனிதர்கள் எரிந்து போக ஆயத்தமாய் இருக்கையில் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் நடப்பார்கள். என்னே! ஒரு காட்சி - கவனியுங்கள். எல்லா நேரத்திலும் அங்கே ஏதோ காரியம் கீழேயும் மேலேயும் போய்க் கொண்டே இருக்கிறது. நாம் அங்கே மேலே சற்று நோக்கிப் பார்த்து என்ன அங்கே நடக்கிறது என்று பார்ப்போம். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டு இராஜகுமாரனுடைய அங்கிகள் அவரைச் சுற்றிலுமாய் இருக்க என்னால் அவரைக் காணமுடிகிறது, அல்லேலூயா! வலது பக்கத்திலிருந்து வருகிற முதலாவது காரியம், ஒரு மகத்தான பெரிய தூதன் மிகாவேல் என்று அழைக்கப்படுகிறவனை என்னால் காணமுடிகின்றது. அங்கே அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார். அது உங்களுக்குத் தெரியுமா? அவன் அங்கே ஓடிப்போய் அவர் பக்கத்தில் நின்று, 'ஆண்டவரே' என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. அவனுடைய பட்டயத்தை அவனுடைய உறையில் இருந்து இந்தவிதமாக வெளியே உருவுகிறதை என்னால் காணமுடிகிறது. அவர், “இன்று காலையில் நீங்கள் பாபிலோனை நோக்கிப் பார்த்தீர்களா?” என்றார். அவன், “தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையிலே அங்கே மனிதர்கள் அங்கே நடந்து கொண்டு இருக்கிறார்கள். இன்று காலையில் அவர்களுடைய சாட்சியை முத்தரிக்கச் சித்தமாய் இருக்கிற மனிதர்கள் அங்கே இருக்கிறார்கள். நம்முடைய சகோதரர்களை எரித்துப்போடும்படியாய் இருக்கிறார்கள், நான் அங்கே கீழே போகட்டும் நான் காட்சியையே மாற்றி விடுவேன்”, என்று அவரிடத்தில் கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. அவன் அதைச் செய்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன், நான் விசுவாசிக்கிறேன். “இல்லை நீ போய் அதைச் செய்யும்படி நான் அனுமதிக்கமாட்டேன். கேபிரியேல் அல்லது மிகாவேல் நீ ஒரு ஒரு அருமையான தூதனாய் இருந்து வருகிறாய், உன்னுடைய பட்டயத்தை உறையிலே போட்டு அங்கே போய் நில்”, என்று அவர் கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. 23இதோ இன்னொரு தூதன் வருகிறான், அவன் எட்டி என அழைக்கப்படுகிறான். அவன் தண்ணீரைக் கசப்பாக்குகிறவன். இதோ அவன் வந்து, “ஆண்டவரே அங்கே கீழே நோக்கிப் பாருங்கள் நான் தண்ணீர்களின் மேல் எல்லாக் கட்டுப்பாட்டையும் உடையவனாய் இருக்கிறேன், நீர் வெள்ளத்தால் உலகத்தை அழித்தபோது நீர் அதை என்னிடத்தில் கொடுத்தீர். நோவாவையும் அவன் ஜனங்களையும் தவிர, நான் முழு உலகத்தையும் தண்ணீரினால் அழித்துப்போட்டேன். இப்பொழுது என்னைக் கீழே போக அனுமதியும் நான் பாபிலோனையே உலக வரைபடத்திலிருந்து நீக்கி விடுவேன்”, என்று கூறினான். 24அதற்கு, “எட்டி உன்னால் அதைச் செய்யமுடியும், அது உண்மை. ஆனால் நான் உன்னைப் போகும்படி அனுப்ப முடியாது. அது ஒரு மனித அளவு வேலையாக இருக்கிறது” என்று அவர் கூறுவதை என்னால் கேட்கமுடிகின்றது. ஓ, இந்தவிதமாக அவர் எழுந்திருப்பதை என்னால் காணமுடிகிறது. கடைசி அடியை எடுத்து வைக்கும் தருணத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர் அங்கே சென்று, “இங்கே வா” என்று அவர்கள் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய இடி முழக்கத்தை அழைத்தார். ஓ என்னே! அது அவருக்குக் கீழ்ப்படிந்தது. “கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குக் காற்றே இங்கே வா, இந்த இடி முழக்கத்தை சுமந்து செல்லுங்கள், நான் உங்களைக் குதிரைகளைப் போன்று ஓட்டப்போகிறேன். இந்தக் காலை வேளையில் இந்த இடி முழக்கத்தின் மேல் அமர்ந்து இரதத்தைப்போல நான் போகிறேன், நான் தானே நேராக பாபிலோனுக்குப் போகிறேன்” என்று அவர் கூறுவதை என்னால் காணமுடிகிறது. அல்லேலூயா! 25அவர் ஒரு குறுக்கு நெடுக்குமாய் போகும் மின்னலைப் பிடித்து அதை வானத்திலே பிரகாசிக்கும்படியாய் செய்தார். அந்நேரம் அவர்கள் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் நடந்து கடைசி அடியை வைக்கிறார்கள், சரியாக அங்கே அவர்கள் சேரும் நேரத்தில் அவர் ஜீவக்கடலின் வழியாகக் கடந்து போய் ஒரு தென்னங் கீற்றை பறித்து அங்கே நின்றுகொண்டு அவர்களிடமாய் காற்றை விசிறி அனுப்பிக் கொண்டிருந்தார், அல்லேலூயா! மனிதன் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் நடக்கும் பொழுது அவர் எப்பொழுதும் அங்கே இருக்கிறார், ஆம், ஐயா. ஒரு சமயம் ஒரு வயதான பரிசுத்த பிரசங்கியார் அங்கே அதிக நாட்களுக்கு முன்பாக நோவா என்று பெயர் கொண்டவராய் இருந்தார். அவரை உங்களுக்குத் தெரியுமா? மழை பெய்யப்போகிறது, ஒரு புயல் வரப்போகிறது என்று கூறினார். 26ஜனங்கள் சுற்றிக்கொண்டு வந்து, “அங்கே உயரே இருக்கிறானே அந்த வயதான பரிசுத்த உருளை சொல்லுவதைக் கேட்டீர்களா? அவன் சொல்லுகிறான் மழைபெய்யப் போகிறதாமே” என்றார்கள். “என்ன பூமியின் மேல் மழை பெய்யப் போகிறதா? எப்படி? அந்தத் தண்ணீர் எங்கிருந்து வரும். நாம் போய் விஞ்ஞானத்தை எடுத்து அங்கே உயரே ஏதாவது தண்ணீர் இருக்கிறதா என்று கண்டடைவோம். ஏன், இல்லை அங்கே உயரே தண்ணீர் ஏதும் கிடையாது, என்ன காரியம்? அந்த வயதான பிரசங்கியாருக்கு ஏதோ தலைக்கிறுக்கு” என்று கூறுகிறதை என்னால் கேட்க முடிகின்றது. ஆனால் தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார். தேவன், “உன்னுடைய வீட்டாரையும், ஜனங்களையும் இரட்சிக்கும்படியாக, நோவா, நீ ஒரு பேழையை உண்டுபண்ணு என்றார். அதைச் செய்வதற்கு நோவா போதுமான அறிவை உடையவனாயிருந்தான், அவ்வளவுதான். அவன் வந்து பேழையை ஆயத்தம் செய்தான். அவர்களில் சிலர், ஒரு மூலையில் இருந்து கொண்டு, “அங்கே உயரே இருக்கிறானே அந்த அரைகுறை பிரசங்கி, அங்கே உயரே இருந்து மழை பெய்யப்போகிறது என்பதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறானே அந்த மழைக் கதையைக்குறித்து என்ன? அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீங்கள் எப்பொழுதாவது கேட்டு இருக்கிறீர்களா, தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையிலே அவன் இருப்பதாக அவன் நினைத்துக்கொண்டு இருக்கிறான்” என்றார்கள். அவன் அதில்தான் இருந்தான். ஆமென். 27முதலாவது காரியம், அங்கே ஒரு இடிமுழக்கமும், மின்னலும் வந்தது என்று உங்களுக்குத் தெரியும். அங்கே வயதான தாய் ஒட்டகம் அங்கே வெளியே உயரே பார்த்து, “அப்பா ஒட்டகமே அது என்ன என்று உமக்குக் கேட்கிறதா? அது இடியாக இருக்கிறது, நோவா கூறினது அதுதான், நாம் பேழைக்குப் போய்விடுவோம்” என்று கூறினான். அவைகள் அந்த மலையினூடாகக் கீழே சென்றன. இதோ வருகிறது அப்பா குதிரையும், அம்மா குதிரையும் மற்ற எல்லா ஜோடிகளும் ஒன்றின் பின் ஒன்றாக பேழைக்குள்ளாகச் சென்றன. தேவன் கதவை அடைத்து மழையை அனுப்பினார். நோவா தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் இருந்தான். அவர்களில் சிலர் மரத்துண்டுகளின் மேல் ஏறிக்கொண்டு, “நான் மிதந்து கொண்டு தண்ணீரின் ஊடாக செல்வேன்” என்றனர். ஆனால் நான் உங்களுக்குக் கூறுவேன் புயலானது அடிக்கத்துவங்கிய போது பேழை உயரே சென்றது. அல்லேலூயா! என்ன அவர்கள் தேவனால் அளிக்கப்பட்ட பாதையில் இருந்தனர். தேவன் அளிக்கின்ற பாதையில் நடக்கின்ற ஜனங்களை தேவன் எப்போதும் ஆசீர்வதிப்பார். அவர் ஒரு மரத்துண்டை அளிக்கவேயில்லை, அவர் இதை அளிக்கவே இல்லை, அவர் ஒரு பேழையையே அளித்தார். இன்றைக்கு என் சகோதரனே, சகோதரியே அங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கே ஒரு பாதை அளிக்கப்படுகிறது. அது தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினூடாக இருக்கிறது. அவர் அங்கே கல்வாரியில் மரித்தார், அவருடைய இரத்தத்தின் மூலமாக நமக்குப் பாவமன்னிப்பு உண்டாகியிருக்கிறது. அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அங்கீகரித்தார் என்பதற்கு அடையாளமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லேலூயா!. 28எப்படியிருந்தாலும் என்னைப் பரிசுத்த உருளை என்று அழைக்கப் போகிறீர்கள் எனவே நீங்கள் இப்பொழுதே அதை துவங்குவது நலம் சரி. நான் மிகவும் நன்றாக உணருகிறேன், எல்லாம் சரியே! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்ளா? அது தேவனுடைய பாதையும், ஒரே பாதையுமாய் இருக்கிறது. அது மெத்தோடிஸ்டு பாதையல்ல, பாப்டிஸ்டு பாதையல்ல, பிரஸ்பிடேரியன் பாதையல்ல, பெந்தெகொஸ்தே பாதையல்ல, அது கிறிஸ்துவின் பாதையாய் இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறார். அவர் தேவனுடைய அளிக்கப்பட்ட பலியாய் இருக்கிறார், அவர் யெகோவா ஃரப்பாவாக இருக்கிறார், அவர் யெகோவா யீரேவாக இருக்கிறார், அவர் மானேசேவாக இருக்கிறார். ஆபிரகாம் ஈசாக்கைச் செலுத்தின் போது அந்த இடத்தை யெகோவாயீரே என்று அழைத்தான். “கர்த்தர் தாமே தனக்கு ஒரு பலியைப் பார்த்துக் கொள்வார்” அதோ அது அங்கே தேவனுடைய குமாரனாய் இருக்கிறது. ஆமென். தேவன் தப்பித்துக்கொள்ள ஒரு பாதையையே எப்போதும் உண்டுபண்ணுகிறார். ஆம், ஐயா. 29ஒரு சமயம் அங்கே ஒரு வயதான பிரசங்கியார் பிரசங்கித்துக் கொண்டிருந்தார், அவருடைய பெயர் எலியா. அவர் எழும்பி நின்று தேசத்தை சுற்றும் முற்றுமாய் பார்த்து, “நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் மோசமானதாக இது இருக்கிறது என்று நான் சொல்லுவேன்” என்று கூறினான். 30அந்தப் பழைய ராஜா அங்கே ஒரு பழைய வர்ணம் தீட்டப்பட்ட யேசபேலை மணந்து கொண்டான். அவளுடைய முகத்தில் போதுமான அளவு வர்ணம் இருந்தது. முகத்துக்கு வர்ணம் பூசப்பட்டவளாய் வேதாகமத்தில் காணப்படுகின்ற ஒரே ஒரு பெண் அவள்தான். தேவன் அவளுக்கு என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா? தேவன் அவளை நாய்களுக்குப் புசிக்கக்கொடுத்தார். அந்த ஒன்றே ஒன்றுதான் எனக்குத் தெரியும். 31முகத்தில் அதிகமான வர்ணம் பூசி இருக்கிற ஒரு ஸ்திரீயை பார்ப்பீர்களானால், அவளை எப்படி அழைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஹலோ மிஸ் நாய்க் கறி என்று கூறுங்கள். அவள் நாய்க்கறியைப் போன்றுதான் இருக்கிறாள். ஓ, என்னே கவனியுங்கள், சகோதரனே இப்பொழுதுதான் நான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேன். அது அஞ்ஞான மார்க்கத்தின் வாரிசாக இருக்கிறது. அஞ்ஞானிகள் தாங்களாகவே வர்ணம் தீட்டிக்கொள்வார்கள். ஓ, சகோதரனே ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தேவனோடு சரியாக ஆகும் பொழுது நீங்கள் அதை அவர்களிடத்தில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தாங்களாகவே வெட்கம் அடைவார்கள். அல்லேலூயா! 32பையன்களே, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அந்த இஸ்ரவேலர் எல்லாரும் அதைச் செய்யும்படி செய்தாள். எலியா கர்த்தாவே வானங்களை அடைத்துவிடும். அதைக்குறித்து ஏதாவது காரியம் செய்யும் என்றான். தேவன் பேசி, “இப்பொழுது எலியா நீ என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறேன், நேராகப் போய் ஆகாப்பினிடத்தில் பேசு” என்றார். இங்கே ஒரு வயதான பிரசங்கியார் வருகிறார். ஒரு ஆட்டுத்தோலைத் தன்மேல் அந்தவிதமாய் போர்த்தினவனாய் முகமெல்லாம் கிருதா மயிர் வளர்ந்தவனாய் ஒரு ரோம் புழுவைப் போல் நடந்து இங்கே வருகிறான். அங்கே நேராக ராஜாவுக்கு முன்பாக நடந்து சென்று, “நான் அழைக்கும் வரைக்குமாய் வானத்தில் இருந்து ஒரு துளி பனிக்கூட பெய்யாது” என்று கூறினான். அல்லேலூயா! அவன் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் இருந்தான், ஆம் ஐயா. “மதவெறியனே நீ இங்கிருந்து வெளியே போ, அதுசரி, நாங்கள் என்ன செய்கிறோம் என்று எங்களுக்குத் தெரியும். 33வயதான எலியா, “கர்த்தாவே நான் என்ன செய்யவேண்டும். நீர் எஞ்சியுள்ள அளிக்கப்பட்ட பாதையைத் தாரும். நான் அதை செய்துவிட்டேன்” என்றான். அதற்கு அவர், “நீ எழுந்து கேரீத் ஆற்றண்டைக்குப் போய் அங்கே இரு” என்று கூறினார். அதுசரி. அது மோசமான இடம், நான் போய் அங்கே இருப்பேன். உம்முடைய பாதை என்னை அங்கே நடத்துகிறதென்றால் நான் அதுமட்டுமாய் நடந்து போகிறேன் என்றான். அது மட்டுமாய் நடந்து போய் உட்கார்ந்தான், “இப்பொழுது கர்த்தாவே நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்” என்றான். “அங்கே உட்காரு அங்கே அமர்ந்து இரு” என்றார். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவனுக்குப் பசி உண்டாகத் துவங்கியது. அவன், “கர்த்தாவே எனக்குப் பசி உண்டாகிறது” என்று கூறினான். இதோ ஒரு காகம் வருகிறது. 34அவர்களில் சிலர், “அந்த வயதான பரிசுத்த பிரசங்கியாரைப் பாருங்கள், அங்கே போய்க் குன்றின் மேல் உட்கார்ந்திருக்கிறான். ஏன் அவன் பைத்தியம்தானே, அந்த ஆள் சூரியனுக்குக் கீழே அங்கே உட்கார்ந்து மரிக்கப்போகிறான் ஏன்? அவன் ஒரு பைத்தியம்” என்றார்கள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அங்கே எல்லாத் . தண்ணீர்களும் வற்றிப்போயிற்று, அங்கே கீழே தேசத்திலே குடிக்கத் தண்ணீரும் வற்றிப்போயிற்று, அங்கே கீழே தேசத்திலே குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஆனால் ஒவ்வொரு முறையும் எலியாவிற்குக் குடிக்க வேண்டும் எனத் தோன்றினால் கேரித் ஆற்றில் குனிந்து குடிப்பான், அவனுக்குப் பசி உண்டான போது இதோ ஒரு காகம் ஒரு சாண்ட்வெஜ் - யை வாயில் வைத்துக்கொண்டு, “இங்கே இருக்கிறாயா எலியா” என்று கொண்டுவந்து கொடுத்தது. “அந்தக் காகங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது” என்று நீங்கள் கூறலாம். “சகோதரன் பிரன்ஹாம் நீர் அதை விசுவாசிக்கிறீர் என்று கூறுகிறீர்களா?” ஆம், ஐயா, ஆம், ஐயா, “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ஒரு காகமானது எலியா சாப்பிடுவதற்காக எதையோ மூன்று வருடம் ஆறு மாதத்திற்குக் கொண்டு வந்தது என்றா?” “நான் அதை விசுவாசிக்கிறேன். அதற்கு அது எங்கிருந்து கிடைத்தது என்கிறீர்களா எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே காரியம் காகம் அதை எங்கிருந்து கொண்டு வந்ததோ, எலியாவிற்காக அதைக் கொண்டு வந்தது, எலியா அதைச் சாப்பிட்டு மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் அதைக் கொண்டு ஜீவித்தான், அது உண்மை. நான் அதை விசுவாசிக்கிறேன்” 35அது அதே காரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லலாம், “உங்களை சந்தோஷமாக்குகிறது என்ன? உங்களை புயங்களை அசைக்க வைக்கிறது என்ன?” எனக்குத் தெரியாது, எனக்குத் தெரிந்த ஒரே காரியம் அதற்காகக் கல்வாரியில் கிரயத்தைச் செலுத்தியாகி விட்டது. வேதம் அதைப் போதித்தது. பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வந்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டேன் அல்லேலூயா! அது உண்மை . அது எங்கிருந்து வருகிறது என்று என்னால் உனக்குக் கூறமுடியாது. ஆனால் நான் அதை இங்கே நான் பெற்றுக் கொண்டேன். அல்லேலூயா! அது இங்கே கொண்டு வந்தது. ஓ, என்னே! அது உன்னுடைய கோட்டை உனக்கு நன்றாகப் பொருந்தும்படியாகச் செய்கிறது நிச்சயமாக அல்லேலூயா! ஆச்சரியப்படாதேயுங்கள். அதற்கு “தேவனை ஸ்தோத்தரி” என்று அர்த்தம் ஆமென் அதற்கு அவ்வண்ணமே இருப்பதாக என்று அர்த்தம். ஓ, என்னே நிச்சயமாக அது இருக்கிறது. எனக்குத் தெரியாது. அங்கே உயரே உட்கார்ந்திருப்பவன் பைத்தியமா என்று அவர்கள் கூறுகிறார்கள். சாப்பிடுவதற்கான நேரம் வந்தது, இதோ கருத்த சமைப்பவன் அங்கே வந்துவிட்டான். “இங்கே இருக்கிறாயா எலியா இதோ உன்னுடைய காலை ஆகாரம்”. ஏன் இன்றிரவு இங்கே இருக்கின்ற பாதி ஜனங்களுக்கும் அவன் மேலானவனாக இருக்கிறான். இங்கே இருக்கின்றவர்களில் அனேகருக்குக் கருத்த வேலையாட்களே கிடையாது என்று யூகிக்கின்றேன், ஆனால் அவன் சில கருத்த வேலைக்காரர்களை உடையவனாய் இருந்தான். ஒவ்வொரு வேலையும் காகங்கள் அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டு வந்தது அல்லேலூயா! மகிமை. தேவன் ஒரு சாப்பாட்டு அறையை எங்கேயோ உடையவராய் இருந்தார். அவர் அதை ஆயத்தம் பண்ணி சமைத்து அவனிடத்திற்கு அனுப்பினார். அல்லேலூயா! அந்த அதே தேவன் இன்றைக்கும் ஜீவித்துக்கொண்டும், ஆண்டு கொண்டும் இருக்கிறார். 36அவருடைய அளிக்கப்பட்ட பாதையில் அவன் தரித்திருந்தான். தேவன் அவனிடத்தில் அங்கே உயரே போய் அமர்ந்திரு என்று கூறினார். அவன் அதைச் செய்தான், செய்வதற்கு அவன் அறிந்ததெல்லாம் அவ்வளவுதான். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது உண்மைதான் என்று விசுவாசிக்கிறீர்களா? அது அதுவாகத்தான் இருக்கிறது, ஆமென். ஆம், ஐயா. 37ஒரு நாள் ஒரு சிறு பெண் வீதியினூடாக வந்து கொண்டிருந்தாள், முடிவிலே அவள், “ஓ, அல்லேலூயா, அல்லேலூயா” அவள் அப்பொழுதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டாள். அங்கே எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு நாத்திகன் “நீ என்னத்தைக் குறித்து அவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய் வாலிபப் பெண்ணே ” என்றான். அவள், “ஓ, இயேசுவானவர் இப்பொழுதுதான் என்னை இரட்சித்து பரிசுத்த ஆவியினால் நிறைத்தார், நான் அவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன்” என்றாள். 38அவன், “இங்கே பார் உன்னுடைய கரத்திலிருக்கிறது என்ன” என்றான், அவள், “என்னுடைய வேதாகமம்” என்றாள். “நீ அதை விசுவாசிக்கிறாயா” என்றான். அவள், “நிச்சயமாக” என்றாள். அவன், “அது எல்லாவற்றையும் நீ விசுவாசிக்கிறாயா” என்றான்? “அது எல்லாவற்றையும்” என்றாள். “யோனாவின் அந்தக் கதையை நீ விசுவாசிக்கிறாயா” என்றான். அவள் “ஆம்” என்றாள். அவன், “உண்மையாகவே ஒரு திமிங்கலம் அவனை விழுங்கி விட்டது என்பதை நீ விசுவாசிக்கிறாயா” என்றான். அவள், “ஆம் ஐயா நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றாள். “விசுவாசத்தைத் தவிர்த்து வேறு எந்தவிதத்திலாவது உன்னால் அதை நிரூபிக்க முடியுமா?” என்றான். “நல்லது, நான் பரலோகத்திற்குப் போகும் போது நான் சகோதரன் யோனாவை அந்தக் கேள்வியை கேட்பேன்” என்றாள். அந்த நாத்திகன் அவளிடத்தில், “சகோதரன் யோனா பரலோகத்தில் இல்லாமல் போனால் என்ன செய்வாய்” என்றான். அதற்கு, “அப்படியானால் நீர்தான் அவரைக் கேட்க வேண்டும்” என்றாள். அல்லேலூயா! அவனுக்கு ஒரு இடம்தான் விடப்பட்டிருக்கிறது, அது நரகம். தேவனுடைய பாதையைப் புறக்கணித்தால் நீங்கள் நரகத்திற்குப் போய்த் தான் ஆகவேண்டும். நீங்கள் போகத்தான் வேண்டும். அதுதான் ஒரேயொரு இன்னொரு வழி. எனவே நீங்கள் ஒரு வழியிலோ அல்லது அடுத்த வழியிலோ இருக்கிறீர்கள் ஆமென் எல்லாம் சரியே. 39அங்கே அவன் உயரே உட்கார்ந்து கொண்டு இருக்கக் காகங்கள் சாப்பிடுவதற்கு ஏதோ காரியத்தைக் கொண்டு வருகிறதை என்னால் அங்கே காணமுடிகின்றது. அவன் அப்படியே கீழே நடந்து சென்றான், ஒருநாள் குன்றின் அடிவாரத்திற்கு அவன் நடந்து சென்றான். தேவன் அவனிடத்தில், “இப்பொழுது இந்தக் குளம் வற்றிவிட்டது. அங்கே, நீ ஒரு விதவையின் வீட்டிற்குப் போகும்படி நான் விரும்புகிறேன்” என்றார். ஒரு பிரசங்கியாரை என்னவிதமான ஒரு இடத்திற்குப் போவதற்கு போகும்படி தேவன் கூறினார். அதுதான் அளிக்கப்பட்ட பாதையாய் இருந்தது. அவன் அங்கே நடந்து சென்றான். அவளோ இஸ்ரவேலைச் சேர்ந்தவளும் அல்ல, இல்லை. அவள் இஸ்ரவேலர் அல்ல. அவள் திரும்பி அங்கே சென்றாள். அவன் குன்றின் அடிவாரம் வரை நோக்கி நடந்தான். 40அவன் குன்றின் அடிவாரம் நோக்கி நடக்கையில் அங்கே முற்றத்தில் நிற்கின்ற ஒரு வயதான விதவையைக் கண்டான். அவள் விறகுகளை ஒன்று சேர்த்து ஒடித்துக் கொண்டிருந்தாள். அவன், “உள்ளே போய் எனக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வா, கொஞ்சம் தண்ணீரும் கொண்டுவா” என்றான். அவள், “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும் ஒருபோதும் அழியாத உம்முடைய ஆத்துமாவைக் கொண்டும் சொல்லுகிறேன், என்னுடைய மகனுக்கு ஒரு அப்பத்தைச் சுடுவதற்கான போதுமான மாவுதான் என் வீட்டில் இருக்கிறது” என்று கூறினாள். இந்த அப்பத்தைச் சுடும் படிக்கு நான் இரண்டு விறகுகளைப் பொறுக்குகிறேன், நானும் அவனுமாய் அதைச் சாப்பிட்டு மரிக்க வேண்டும் என்றாள். 41அவன் குன்றின் அடிவாரம் நோக்கி நடக்கையில் அங்கே முற்றத்தில் நிற்கின்ற ஒரு வயதான விதவையைக் கண்டான். அவள் விறகுகளை ஒன்று சேர்த்து ஒடித்துக் கொண்டிருந்தாள். அவன், “உள்ளே போய் எனக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வா, கொஞ்சம் தண்ணீரும் கொண்டுவா” என்றான். அவள், “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும் ஒருபோதும் அழியாத உம்முடைய ஆத்துமாவைக் கொண்டும் சொல்லுகிறேன், என்னுடைய மகனுக்கு ஒரு அப்பத்தைச் சுடுவதற்கான போதுமான மாவுதான் என் வீட்டில் இருக்கிறது” என்று கூறினாள். இந்த அப்பத்தைச் சுடும் படிக்கு நான் இரண்டு விறகுகளைப் பொறுக்குகிறேன், நானும் அவனுமாய் அதைச் சாப்பிட்டு மரிக்க வேண்டும் என்றாள். அவன், “போய் முதலாவது எனக்குக் கொஞ்சம் தண்ணீரும் அப்பத்தை சுட்டு, அதை எனக்கு கொண்டு வா” என்றான், அல்லேலூயா! 42அவள் என்ன செய்யப்போகிறாள், அங்கே தேவனுடைய அளிக்கப்பட்ட பாதை இருக்கின்றது. “முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய எல்லா நீதியையும் தேடுங்கள்”. நீங்கள், “சகோதரன் பில், என்னுடைய தாயார் வீட்டை விட்டு ஓடிவிட்டாள், என்னுடைய புருஷன் என்னோடு ஜீவிக்க மறுக்கிறார்” என்று சொல்லலாம். “முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய எல்லா நீதியையும் தேடுங்கள் (அல்லேலூயா!) அப்பொழுது இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும் ” அது சரிதானே! 43“சகோதரன் பில், நான் அதை எப்படிச் செய்யப்போகிறேன்”, அப்படியே தொடர்ந்து போய் செய்யுங்கள். “என்னைப் பின்பற்றுங்கள்” என்று இயேசு கூறினார், அது உண்மையே. உங்களுடைய கண்ணை நேராய் வைத்திருங்கள், சரி. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அவள் உள்ளே போகிறாள். அவள் இரண்டு விறகுகளையும் எடுத்து உடைக்கிறாள், பழைய இந்தியர்கள் எப்படி ஒரு விறகை உடைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையிலேயே அது சிலுவையே. அந்த சிலுவையில் அவர்கள் அவைகளை மத்தியில் பற்றவைப்பார்கள், அங்கேதான் அக்கினி உண்டாக்கப்பட்டு அந்த அப்பம் சுடப்பட்டது. அந்த அப்பத்தை சுட்டு வெளியே கொண்டு வந்து அதைப் பிரசங்கியாருக்குக் கொடுத்தாள். அவன் அங்கே நின்று சாப்பிட்டான். இப்பொழுது, “நீ திரும்பப் போய் உனக்கு ஒன்றும் உன் குமாரனுக்கு ஒன்றுமாய் கொண்டுவா” என்றான். ஏனென்றால் கர்த்தர் சொல்லுகிறதாவது தேவன் பூமியில் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போவதுமில்லை, கலசத்தில் எண்ணெய் குறைந்து போவதுமில்லை“ என்று என்றான். அல்லேலூயா! அது என்ன, முதலாவது அவள் தேவனுடைய இராஜ்ஜியத்தைத் தேடினாள். ஏனென்றாள் அவள் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் சென்றாள். தேவன் அவளுக்கு பலனளித்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி ) ஆம், ஐயா. 44ஒரு சமயம் தன் சகோதரனை இழந்த ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். அவனுடைய பெயர் லாசரு என்பதாகும். ஓ, அவன் ஒரு நல்ல மனிதன். அவனை இழப்பதை அவள் வெறுத்தாள், அவன் மரித்துப் போனான். அவளுடைய போதகருக்குக்காக அல்லது சுவிசேஷகனுக்காக, அவள் ஆள் அனுப்பி இருந்தாள். அது இயேசுவாய் இருந்தது. அவன் சபையை விட்டு வெளியே வந்திருந்தான், அவர்களிடத்தில் இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டாள். வந்து ஜெபிக்கும்படியாக அவள் இயேசுவிற்கு ஆள் அனுப்பினாள். அவர் அங்கிருந்து போய் விட்டு இருந்தார். திரும்பவும் ஆள் அனுப்பினாள், அவரோ தொடர்ந்து சென்றார், அவர், “என் பிதா எனக்குக் காண்பிக்காமல் நான் ஒன்றையும் செய்கிறது இல்லை” என்றார். லாசரு மரிக்கப்போகிறான் என்று பிதா அவருக்கு ஏற்கனவே காண்பித்திருந்தார். 45கொஞ்சம் கழித்து அவர் வந்தார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின்னர் அவர் வந்தார். அவர், “லாசரு மரித்துப்போனான் நான் அங்கே இராததினால் உங்கள் நிமித்தமாய் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நான் போய் அவனை எழுப்புவேன்” என்றார். அப்பொழுது இயேசு வருகின்றார் என்று அவள் கேள்விப்பட்டு அவரை சந்திக்கும்படியாய் அவள் வெளியே போனாள். அது தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருந்தது. போய் இயேசுவை சந்தி, அது எப்பொழுதுமே சரியானது. உங்கள் வீட்டில் துக்கம் இருக்கும் பொழுது போய் இயேசுவை சந்தியுங்கள். உங்களுடைய வீட்டில் வியாதி இருந்தால் போய் இயேசுவை சந்தியுங்கள் உங்கள் வீட்டில் இருதயவலி இருக்கிறதா, போய் இயேசுவை சந்தியுங்கள் அல்லேலூயா! ஏதாவது ஒரு காரியத்திற்கு உங்களுக்கு தேவை இருக்கிறதா போய் இயேசுவை சந்தியுங்கள், போய் அவரை சந்தியுங்கள், அவரிடத்தில் எல்லாப் பரிகாரமும் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் அங்கே இருக்கிறது. அவரிடத்தில் பரிகாரம் இல்லை , அவரிடத்தில் சுகம் இருக்கிறது ஆமென். பின்னர் அவள் அவரை சந்திக்கும்படி சென்று அவருடைய பாதத்தில் விழுந்தாள். ஒரு சமயம் அவள் ஒரு கதையை வாசித்து இருந்தாள், அங்கே வேதத்தில் சுனேமியாள் என்ற ஒரு ஸ்திரீ இருந்தாள். எலிசா என்ற பிரசங்கியார் மேல் அவ்வளவு அக்கறை கொண்டவளாய் இருந்தாள். எனவே அவள் ஒரு சிறிய அறையை அவனுக்குக் கட்டி ஒரு கட்டிலையும், ஒரு குத்து விளக்கையும், ஒரு மேஜை மற்றவற்றையும் வைத்தாள். எலிசா அந்த பக்கமாக வந்து அவள் இந்த பிரசங்கியாருக்கு செய்த நன்மையானவைகளையும் கண்டான். தசமபாகம் மற்றும் எல்லாக் காரியங்களையும் கொடுத்தாள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எனவே போய் அவனிடத்தில், “நாம் அவளுக்காக என்ன செய்யமுடியுமென்று பார். போய்க் கேட்டு நான் அவளுக்காக இராஜாவினிடத்தில் பேசவேண்டுமா, அல்லது அதிபதியினிடத்தில் பேச வேண்டுமா என்று பார்” என்று கூறினான். அவள் அதற்கு, “என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்” என்றாள். அவன், “சரி போய் நான் அவளுக்கு என்ன செய்யக்கூடுமென்று அவளிடத்தில் கேள்” என்றான். கேயாசி அதற்கு அவள் மலடியாய் இருக்கிறாள். அவளுக்குப் பிள்ளைகள் இல்லை என்றான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது சரியாக வருஷத்தின் இந்த நேரத்திலே ஒரு பிராண உற்பத்திக் கால திட்டத்திலே அவள் ஒரு குமாரனைப் பெற்றுக்கொள்வாள் என்று கூறினான். 46அந்தப் பிள்ளை சுமார் பதினொன்று அல்லது பனிரெண்டு வயதுள்ளவனாய் வளர்ந்தான், ஒருநாள் மதியம் ஆகிறபோது அவன் தன் தகப்பனோடு வயலில் இருந்தான், அப்பொழுது அவனுக்கு சூரிய வெப்பத்தாக்குதல் வந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவன் என் தலை , என் தலை என்று கத்தத் துவங்கினான். அவன் தன் வேலைக்காரன் ஒருவனோடு இந்த சிறிய பையனை அவனிடத்தில் கொடுத்து அனுப்பிவிட்டான். அவன் அவனைக் கொண்டுபோய், அவன் தாயின் மடியில் கிடத்தினான், அவன் மதியம் இறந்து விட்டான். என்னவொரு தகுதியான இடம், அவள் அவனைத் தீர்க்கதரிசி படுக்கிற இடத்திலே உயரே கொண்டுபோய் பிரசங்கியாரின் படுக்கையிலேயே கிடத்தினாள், அவள், “எனக்குக் கழுதையின் மேல் ஒரு சேணங்கட்டி நேராகப் போ நான் உனக்குச் சொன்னால் ஒழிய ஓட்டத்தை வழியில் எங்கும் நிறுத்தாதே” என்று கூறினாள். 47எனக்கு அது பிடிக்கும். முன்னேறி போய்க்கொண்டிருங்கள், நின்று விடாதீர்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள் அது சரி. அதன் தொல்லை என்னவென்றால், நாம் நின்று அநேக ஜனங்களோடு பேசுகின்றோம், அனேக சமூதாய விருப்பங்களுக்காக நாம் நின்று விடுகிறோம். நமக்கு அதிக தையல் வேலையும், தையல் விருந்துகளையும் ஏற்பாடு செய்வதும் அதிகமாக இருக்கிறதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தைப்பதும் இணைப்பதும் குமாரி இன்னார் இன்னாரைப்பற்றி பேசுவதும், அது எவ்வாறு உள்ளது என்றும் உங்களுக்கு தெரியும். இந்த எல்லா வித்தியாசமான காரியங்களும் சபைக்குள்ளே வருகிறது. அந்த சமயத்தில் நீங்கள் அந்த சாக்கடையைக் கழுவி எல்லாவற்றையும் வெளியே எரிந்து பழைய மாதிரியான தேவன் அனுப்பின எழுப்புதலை கொண்டிருக்கத்தான் வேண்டும். நீங்கள் திரும்பும் மட்டும் பரலோகம் கீழே இருந்து பரிசுத்த ஆவியானவர், பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போன்றது வந்து இடத்தையும், ஜனங்களையும் நிரப்பும் வரைக்கும் தொடர்ந்து ஜெபியுங்கள், ஆமென். அதுதான் நமக்குத் தேவையாக இருக்கிறது. “நீ ஓட்டத்தை நிறுத்தி விடாதே” என்று அவள் கூறினாள். 48அவளுடைய புருஷன், “அந்த மனிதன் கர்மேலில் இல்லை , இன்று அமாவாசையும் இல்லை அல்லது ஓய்வு நாளும் இல்லையே” என்றான். அவளோ, “எல்லாம் சரிதான், என்றாள். அவள் தீர்க்கதரிசியண்டைப் போயாக வேண்டும்” என விரும்பினாள். எனவே அவள் நேராகச் சென்றாள். எலியா வெளியே நோக்கிப் பார்த்து, “இதோ சுனேமியாள் வருகிறாள், அங்கே ஏதோ காரியம் அவளோடு தவறாக இருக்கிறது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை” என்றான். அவள் உயரே ஓடி வந்தாள், அவன், “நீயும் உன் புருஷனும் உன் பிள்ளையும் எல்லாம் சுகம்தானா” என்றான். அதற்கு அவள், “எல்லாம் சுகம் தான்” என்றாள். எனக்கு அது பிடிக்கும் அவள் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையை எடுத்துக் கொண்டாள். அவள் எல்லாக் காரியங்களும் இப்போது சரியாகத்தான் இருக்கிறது என்று கூறி, அதன் பின்னரே அதை வெளிப்படுத்தத் துவங்கினாள். அவன் எலிசாவினிடத்தில், “என் தடியை எடுத்துக் கொண்டு வை” அல்லது அவன் கேயாசினிடத்தில், “போய் என்னுடைய தடியை எடுத்துக் கொண்டு அதை அந்தப் பிள்ளையின் மேல் வை” என்றான். ஆனால் அவள் அதற்கு, “நான் உம்மை விடப்போவதில்லை” என்றாள். எனவே தீர்க்கதரிசி திரும்பி வந்து ஜெபித்தான். மேலும் கீழுமாக அறையிலே நடந்தான், அவனுடைய சரீரத்தை அப்படியே மரித்த பிள்ளையின் மேல் கிடத்தினான். அவன் ஜீவனுக்குள் வந்தான். 49தேவன் அவருடைய தீர்க்கதரிசிக்குள் இருக்கிறார் என்பதை சுனேமியாள் உணர்ந்து கொண்டாள் என்று ஸ்திரீயாகிய மார்த்தாள் அறிந்து கொண்டாள். தேவன் அவருடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தாரானால், நிச்சயமாக தேவன் அவருடைய குமாரனுக்குள் இருப்பார். எனவே அவள் இயேசுவினிடம் போகக்கூடுமானால் அவளுக்கும் பரிகாரம் கிடைக்கும். ஆகவே அவள் ஓடிப்போய் அவருக்கு முன்பாக விழுந்து, “ஆண்டவரே, நீர் மாத்திரம்..” என்றாள். அவர் அதுவாகத்தான் இருந்தார். “ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான், இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வது எதுவோ தேவன் அதைச் செய்வார்” என்று கூறினாள். ஓ, அது எனக்கு அது பிடிக்கும். “இப்பொழுதும் கூட நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வது எதுவோ தேவன் அதைச் செய்வார்”. 50அது இன்றிரவுக்கு நல்லதாய் இருக்கிறது, நீங்கள் - “நான் ஒரு பாவி சகோதரர் பிரன்ஹாம், இப்பொழுதும் கூட நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ தேவன் அதைச் செய்வார். ஓ, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்” என்று கூறுங்கள். அவர் அதைச் செய்வார். நீங்கள் சுகவீனமாய் இருந்தால், “என் மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே” என்று கூறுங்கள். இப்போதும் கூட அவர் அதைச் செய்வார் “வைத்தியர் என்னைக் கை விட்டுவிட்டார், ஆனால் இப்போதும் கூட கர்த்தாவே நான் ஐந்து வருடங்களாக நடக்கவே இல்லை ஆனால் இப்பொழுதும் கூட கர்த்தாவே, நான் செவியால் ஏதும் கேட்க முடியவில்லை, எப்பொழுது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்பொழுதும் கூட கர்த்தாவே, நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எப்பொழுது” என்று என்னால் உனக்குச் சொல்ல முடியாது. ஆனால் இப்பொழுதும் கூட கர்த்தாவே, நீர் தேவனிடத்தில் எதைக் கேட்டாலும் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து உம்முடைய அறிக்கைகளின் பெயரில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அல்லேலூயா! இப்பொழுதும் கூட நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வது எதுவோ தேவன் அதைச் செய்வார் என்றார். அவர் தம்மை நேராக நிமிர்த்திக்கொண்டு, “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று கூறினார். 51அதற்கு அவள், “ஆம் கர்த்தாவே பொதுவான உயிர்தெழுதல் நடக்கும், கடைசி நாளிலே அவன் மீண்டும் எழும்புவான்” என்றாள். அவர் அதற்கு, “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன்” என்றார். ஓ, என்னே ! “சிறிய நலிந்தவராய்க் காணப்படுகின்ற அவரைப் பார்க்க அழகு இல்லாதவராய் இருந்தார்” என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் அவர் தம்மை நிமிர்த்தி நின்ற பொழுது அங்கே அவர் தேவனாய் இருந்தார். அவர் “உன்னுடைய சகோதரன் மீண்டுமாய் எழுந்திருப்பான்” என்றார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று தேவன் சொல்லுகிறார். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் அவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், விசுவாசிக்கிறாயா” என்றார். அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவனுடைய குமாரன்” என்றாள். 52“அவனை எங்கே வைத்தீர்கள்” என்றார், இதோ அவர் கல்லறையை நோக்கி நடந்தார். இயேசு கண்ணீர் விட்டார். அதிக நாட்களுக்கு முன்பல்ல ஒரு ஸ்திரீ என்னிடத்தில் கூறினாள், ஒரு மிகவும் நல்ல ஸ்திரீ. இயேசு தெய்வீகமானவர் என்று விசுவாசியாத ஒரு கிறிஸ்தவ விஞ்ஞான கூட்டத்தவளாய் இருந்தாள். அவள், அவர் ஒரு தீர்க்கதரிசி என்ற விசுவசாமுள்ளவளாய் இருந்தாள். அவர் ஒரு நல்ல மனிதன், ஆனால் அவர் அப்படியாக இல்லை அவர் கன்னிப் பிறப்பாய் பிறந்தவரல்ல எனக்கூறி அவர்கள் கன்னிப் பிறப்பை மறுதலிக்கிறார்கள். 53அதுமட்டுமல்ல ஆனால், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் பிராடஸ்டென்டு பிரசங்கிமார்களில் 85 சதவீதமானவர்கள், கன்னிப் பிறப்பு போலியானது என்று கூறுகிறதாக ஆராய்ச்சி காட்டுகிறது, சரிதானே! என்னால் அதைச் சுலபமாக செய்யமுடியும், நீங்கள் ஜீவிக்கிறதைக் கொண்டு என்னால் சுலபமாய் சிந்திக்க முடியும், அது ஒரு போலியான ஒன்று என்று நம்பமுடிகின்றது. சரியாக, அப்படியே அது உண்மையாய் இருக்கிறது. இயேசுகிறிஸ்து காணும்படியாய் மீண்டும் திரும்பி வருவார் என்பதை அதிகமான சதவீதமானவர்கள் விசுவாசிப்பதில்லை. நமக்கு ஒரு எழுப்புதல் தேவை என்பதில் வியப்பொன்றும் இல்லை. 54சகோதரனே இங்கே கவனியுங்கள். இன்றைக்கு நீங்கள் அவ்வளவாக எழுப்புதலைப்பற்றிக் கேள்விப்படுகிறீர்கள். நமக்கு ஒரு எழுப்புதலே இருந்த தில்லை. நீண்ட காலத்திற்கு முன்பல்ல, நான் இன்னொரு மனிதனை பின் தொடர்ந்து கொண்டு போனேன். அங்கே அவர்கள் இதைக் குறித்து அதிகமாய் பேசிக்கொண்டார்கள். “அவன் ஒரு பட்டணத்திற்கு சென்றானாம் அவனுக்கு ஐந்தாயிரம் மனந்திரும்பினவர்கள் கிடைத்தனர் என்றார்கள். நாங்கள் அதை அப்படியே பின் தொடர்ந்து போனோம், (நான் அல்ல) ஒரு கூட்ட ஊழியக்காரர்கள் அட்டைகளை எடுத்துக்கொண்டு, மீண்டுமாய் அவர்களைப் பின் தொடர்ந்து போனபோது இரட்சிக்கப்பட்டார்கள் என அவர்கள் உரிமை கோரினவர்களில் முப்பது பேரைக்கூட முப்பது நாட்களில் காணமுடியவில்லை யாம். நான் என்ன நினைத்தேன் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்பொழுது அது மனமாற்றங்களுக்கு பதிலாக உணர்த்தப்படுகிறதாய் இருக்கிறது என்று நான் நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு ஒரு நீண்டதான கூட்டங்கள் அல்ல. 55ஆனால் ஒரு பழைய பாணியிலான தேவனால் அனுப்பட்ட பரிசுத்த ஆவியின் எழுப்புதல் கூட்டமே. ஒரு பழைய பாணியிலான, நீல ஆகாய பாவத்தைக் கொல்லுகின்ற, இரத்தத்தினால் கழுவப்பட்ட மார்க்கமே நமக்குத் தேவையாய் இருக்கிறது ஆமென். திரும்பவும் அந்தக் கடல்படையைச் செய்யும் கருவிகளை எடுத்துக் கொண்டு மனந்திரும்புதலை அது செய்கிறதாயிருக்கிறது. அது சரியானது. அதற்குப் பின்னர், அவள், “நல்லது இங்கே பாருங்கள் சகோதரன் பிரன்ஹாம், அவர் ஒரு மனிதனேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை என்னால் உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும்” என்றாள். 56நான், “அதைச் செய்யுங்கள், அவர் தேவன் இல்லை என்பதை நீங்கள் எனக்கு நிரூபித்துக்காட்டினால் அப்பொழுது அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றேன். அவள், “இல்லை அவரொன்றும் தெய்வீகமானவர் இல்லை, அவர் வெறுமனே ஒரு மனிதன், என்னால் வேதாகமத்தைக் கொண்டு அவர் வெறுமனே ஒரு மனிதன் என்று நிரூபிக்க முடியும்” என்றாள். “நீங்கள் வேதாகமத்தைக் கொண்டு அதை நிரூபித்தால் அப்பொழுது நான் அதை ஏற்றுக்கொள்வேன்” என்று கூறினேன். அவள், “நீர் ஆயத்தமாய் இருக்கிறீரா என்றாள், நான் இருக்கிறேன்” என்றேன். அவள் பரிசுத்த யோவான் 11-ல் அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்றபொழுது அவர் அழுதார் என்றாள். “அதனோடு அதற்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது” என நான் கூறினேன். அவள், “ஏன் அவர் ஒரு மனிதனேயன்றி வேறொன்றும் இல்லை என்று அது நிரூபிக்கிறது, அவர் அழுது கொண்டிருந்தார்” என்றாள். 57நான், “இங்கே பார் சீமாட்டியே, அவர் உண்மையாகவே ஒரு மனிதனாய் இருந்தார், ஆனால் அவர் ஒரு மனிதனிலும் மேலானவர், அவர் ஒரு தேவ மனிதனாய் இருந்தார் தேவன் கிறிஸ்துவுற்குள்ளாக இருந்து உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார், ஆம் ஐயா. பிதாவின் சித்தத்தைச் செய்யும்படியாய் அவர் வந்தார். அவர் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் நடந்தார். அவர் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ நோக்கிப் பார்க்கவில்லை என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கூறினாரோ அதையே அவர் செய்தார், அவர்தான் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருந்தார். லாசருவை நோக்கிச் சென்ற பாதையிலே அவர் அழுதார், அழுதுகொண்டு இருந்தபோது அவர் ஒரு மனிதனாய் இருந்தார். ஆனால் அவர் கல்லறையின் பக்கத்தில் நின்ற பொழுது அங்கே மரித்து நான்கு நாட்களாகக் கிடந்த ஒரு மனிதன் இருந்தான். தோல் புழுக்கள் அவன்மேல் நெளிந்து கொண்டு அவனுடைய சரீரத்தின் மேல் உள்ளேயும், வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தன, சுற்றிலுமாய் துர்நாற்றமாய் இருந்தது. 58அவர், “லாசருவே வெளியே வா” என்று கூறினபோது மரித்து நான்கு நாட்களாகக் கிடந்த ஒரு மனிதன் காலூன்றி எழும்பி நின்று மீண்டுமாய் ஜீவித்தான், அது ஒரு மனிதனுக்கு மேம்பட்டதாய் இருந்தது. அல்லேலூயா! ஆம் ஐயா, அவர் அழுது கொண்டிருந்த ஒரு மனிதனாய் இருந்தார், ஆனால் அவன் உயிர்த்தெழுந்த போது அவர் தேவனாய் இருந்தார். 59அவர் மலையிலிருந்து இறங்கி வந்து அன்றிரவு பசியாய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மரங்களை அண்ணாந்து பார்த்து புசிக்க ஏதாவது கிடைக்குமா என்று பார்த்த போது அவர் ஒரு மனிதனாய் இருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் துண்டுகளையும் எடுத்து ஐந்தாயிரம் ஜனங்களுக்குப் போஷித்தபோது அவர் மனிதனைக்காட்டிலும் மேம்பட்டவராய் இருந்தார். அது மாம்சத்தில் இருக்கும் தேவனாய் அவர் இருந்தார். அல்லேலூயா! 60அன்றிரவு அவர் படுத்துக்கிடந்த பொழுது அவர் ஒரு மனிதனாய் இருந்தார், அப்பொழுது வல்லமை அவருடைய வஸ்திரத்தில் இருந்து வெளியே சென்றது, அவர் அவ்வளவு பெலவீனம் அடைந்தவராய், மகத்தான கடலானது கர்ஜித்துக் கொண்டிருக்க ஒரு பத்தாயிரம் பிசாசுகள் அவரை அந்த இரவிலே மூழ்கடித்துப் போடுவேன் என்று ஆணையிட்டு இருந்தது. அப்பொழுது அந்தச் சிறிய படகானது, ஒரு கார்க்கானது ஒரு மகத்தான கடலில் அங்குமிங்குமாக இருப்பது போன்று அலைக்கழித்துக் கொண்டிருந்தது, அங்கே அவர் நித்திரையால் படுத்துக் கொண்டிருந்த பொழுது அவர் ஒரு மனிதனாய் இருந்தார் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் மடிந்து போகிறோமே எங்கள் மீது அக்கரை இல்லையா என்று கூறினபொழுது. அந்தப் படகின் பின்னனியத்தில் அவர் காலூன்றி நின்று, “இரையாதே அமைதலாயாய் இரு” என்று கூறின பொழுது அங்கே ஒரு அமைதி உண்டாயிற்று. அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேம்பட்டதாய் இருந்தது. அல்லேலூயா! அது என்னுடைய தேவனாய் இருந்தது. அல்லேலூயா! உண்மைதான் அவர் தேவனாய் இருந்தார், ஆம் உண்மையாகவே தேவனாய் இருந்தார். 61அவர் கல்வாரியில் தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் ஒரு மனிதனாய் இருந்தார், அப்பொழுது அவர்கள் செய்யாததிலேயே ஒரு மகத்தான புகழ்மாலையை அவருக்குக் கொடுத்தார்கள். அப்பொழுது அவர்கள் “மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள். என்னவொரு அற்புதமான புகழ்மாலையை அல்லது வாழ்த்துரையை அவர்கள் அவருக்குக் கொடுத்தார்கள். அவர் மற்றவர்களையும் இரட்சித்துத் தன்னையும் இரட்சித்துக் கொண்டால், அவரால் மற்றவர்களை இரட்சித்திருக்க முடியாது. எனவே அவர் இரட்சிக்கும் பொருட்டாய் அவர் தம்மைத்தாமே கொடுக்க வேண்டியதாய் இருந்தது. அவர் இரக்கத்திற்காகக் கதறின போது, அவர் மனிதனாய் இருந்தார். அப்பொழுது அவர், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்றார், அவர் ஒரு மனிதனைப்போன்று மரித்தார் ஆம். ஆனால் ஈஸ்டர் காலையன்று அவர் எழும்பினபோது அவர் தேவன் என்பதை நிரூபித்தார். தீர்க்கதரிசி இவ்வண்ணமாய் கூறியதில் வியப்பொன்றும் இல்லை. ஜீவிக்கும் போது அவர் என்னை நேசித்தார், மரிக்கும் பொழுது என்னை இரட்சித்தார், அடக்கம் பண்ணப்பட்டபோது, நம்முடைய பாவங்களை தூரமாய் அவர் சுமந்து கொண்டு போனார், உயிர்த்தெழுந்த போது இலவசமாக என்றென்றைக்குமாய் அவர் நீதிமான் ஆக்கினார் என்றோ ஒருநாள் அவர் வருகிறார் ஓ , மகிமையான நாள் அல்லேலூயா!. 62நான் அவரை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் நடவுங்கள். ஒரு சமயம் சில வான சாஸ்திரீகள் அவருடைய பிறப்பிற்காக அவரை ஆராதிக்கும்படி போகின்றதை என்னால் காணமுடிகின்றது. அவர்கள் எல்லாரும் ஆயத்தமாகின்றதை என்னால் காணமுடிகிறது. அவர்களுடைய ஒட்டகங்களை ஆயத்தப்படுத்துகின்றனர். ஜிம், ஜோன்ஸும் எல்லா மற்றவர்களும் மத்தியில் ஜான்டோவும் பொருட்களை ஆயத்தப்படுத்துவதை என்னால் காணமுடிகின்றது. அவர் அந்த சீட்டுக்கட்டை மேஜைகளில் வைக்கிறதையும் அதைப்போன்று பக்கவாட்டிலே அடுக்கி எல்லா காரியங்களையும் மேலே வைத்தார்கள். அவர்கள் இயேசுவானவரை ஆராதிக்கும்படி போகப் போகிறார்கள். அவர்கள் அங்கே சென்றபொழுது அதை அறிந்துகொள்ள நேர்ந்தது. அந்த வயதான ஒட்டகங்களால் நடக்க முடியாது என்பதைத் தீர்மானித்தார்கள். இன்றைக்கு சபையோடு காரியம் அந்த விதமாய்தான் இருக்கிறது. நீங்கள் அதனோடு அவ்வளவு அதிகமான உலகத்தை ஏற்றிவைத்திருக்கிறீர்கள். அது அப்படியே உங்களை திருப்புகிறது அது உண்மை . 63அந்தவிதமாக அவனும் அவர்கள் எல்லாரும் புறப்படுகின்றதை என்னால் காணமுடிகின்றது. அவர்கள் தூரத்திலே மலையின் பக்கவாட்டிற்குச் சென்றார்கள், அவர்களால் ஊடாகக் கடந்து கூட போக முடியவில்லை . ஏனென்றால் “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாய் இருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” ஆம் ஐயா. ஒரு வயதான மனிதன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதை என்னால் காணமுடிகின்றது. அவன் தன்னை இலகுவாக்கி கொண்டு இருந்தான். “ஏனென்றால் நான் பரலோகம் போவதற்காக நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்” சகோதரனே பரலோகம் போவதற்காக நான் மூட்டைகளை நான் கட்டவில்லை, நான் பரலோகம் போவதற்காக மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறேன் அல்லேலூயா! அதன்பிறகு அங்கே எடுத்துக்கொள்ளப்படுதல் எல்லாக் காரியங்களையும் துண்டித்துப் போடும், “பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கின்ற பாவத்தையும் தள்ளிவிட்டு இந்த ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று வேதாகமம் கூறுகிறது. 64அந்த வயதானவன் போகின்றதை என்னால் காணமுடிகின்றது, அவனுடைய மனைவி, “யோவான் என்ன விஷயமப்பா நீ எங்கே போகிறாய்” என்று அவன், பக்கமாய் இருந்து கூறுவதை என்னால் காண முடிகின்றது. அவன், “நான் கர்த்தரை ஆராதிக்கப் போகின்றேன்” என்றான். “நீ போகின்றாய் என்று உனக்கு எப்படித் தெரியும்” என்றான், அவன், “நல்லது நான் போகின்றேன்” என்றான். “நல்லது. உன்னிடத்தில் ஒரு திசைக்காட்டும் கருவி கூட இல்லையே உனக்கு ஊழியம் செய்யும் அங்கீகார சீட்டு கூட கிடையாதே, இந்த உலகத்தில் உனக்கு என்னதான் நேர்ந்தது. அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்களா? நீ கர்த்தரை ஆராதிக்கப் போகின்றீரா?” என்றான். “ஆம்” என்றான். “உம்முடைய திசைக்காட்டும் கருவியை கொண்டு போங்கள்” என்றனர். “வேண்டாம், எனக்கு அது தேவையில்லை” என்றான். “உமக்கு அது தேவையில்லை, நீர் எப்படி அந்த இடத்திற்குப் போய்ச் சேரமுடியும்”. 65அவன் விடிவெள்ளி நட்சத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “நான் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையிலே போகிறேன்” என்று கூறுவதை என்னால் காணமுடிகின்றது ஆமென். வான சாஸ்திரீகளை வழிநடத்திக் கொண்டுபோக தேவன் ஒரு நட்சத்திரத்தை அளித்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு திசைக் காட்டும் கருவி தேவையில்லை, அவர்களுக்கு தேவனுடைய அளிக்கப்பட்ட பாதை நட்சத்திரம் தேவையாக இருக்கிறது, மகிமை. வான சாஸ்திரிகளை நட்சத்திரத்தைக் கொண்டு சென்ற அதே தேவன் கிறிஸ்துவினிடம் புதிய பிறப்பிற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு உங்களை வழிநடத்திக் கொண்டுபோக இங்கே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறது. “ஒரு மனுஷன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” புருஷர்களே, ஸ்திரீகளே நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்களா? 66என்னே நேரமானது நெருங்கிவிட்டது. ஓ, என்னே அதற்குள்ளாக பிரவேசிக்க வேண்டும் போல் உணருகிறேன். என்னுடைய கரங்களை என்னுடைய பேண்ட் ஜேபியில் போட்டுக்கொண்டு, ஒரு வயதான சாஷ்டாங்க பிரசங்கியாரைப் போல் பிரசங்கித்துக்கொண்டு, ஏன் நான் அதை விரும்புகிறேன்? நீ ஐஸ்கிரீம் சாப்பிடுகிறது நல்லது. ஆனால் உன்னுடைய பக்கங்களில் ஒட்டியிருக்க கொஞ்சம் பன்றி இறைச்சியும், பீன்சும் நீ அவசியம் சாப்பிட்டாக வேண்டும், அது இயேசு அல்லாமல் வேறொன்றும் இல்லை. நம்மை போஷிக்க நமக்கு விறுவிறுப்பு உண்டாக்க ஏதாவது காரியம் தேவையாய் இருக்கிறது. நமக்கு அதுதான் தேவையாய் இருக்கிறது. நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறதில்லையா? 67தேவன் ஒரு அளிக்கப்பட்ட பாதையை உடையவராய் இருக்கிறார். நீங்கள் இன்றிரவு அதில் இருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டீர்களா? இப்பொழுது என்னுடைய நல்ல பாப்டிஸ்டு நண்பர்களே உங்களைத்தான், நான் பாப்டிஸ்டைச் சேர்ந்தவன்தான். நான் ஒரு பாப்டிஸ்டாய் இருந்தேன் இங்கே இருக்கின்ற என்னுடைய போதகர் ஒரு பாப்டிஸ்டாய் இருக்கிறார், ஆனால் நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லப்போகிறேன் “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா?” என்று அப்போஸ்தலர் 19-ஆம் அதிகாரம் கூறுகிறது. நீங்கள், “விசுவாசிகள் ஆனபோதல்ல” ஆனால் நீங்கள் விசுவாசித்தது முதற் கொண்டு ஆமென். நீங்கள் பெற்றுக்கொள்ள வில்லையென்றால் இன்றிரவு அது உங்களுக்காக இருக்கிறது. தேவன் ஒரு அளிக்கப்பட்ட பாதையை உடையவராய் இருக்கிறார். 68சகோதரனே சகோதரியே உங்களுடைய சொந்த வழியில் போக முயற்சிக்க வேண்டாம். அத்தி இலையினூடாகப் போகாதீர்கள். வெள்ளத்தால் உலகை அழித்தபோது அவர்கள் முயற்சித்தது போன்று ஒரு மரத்துண்டின் மேல் மிதந்து கொண்டு போகாதீர்கள். ஆதாம் செய்தது போன்று உங்களை அத்தி இலைகளால் மூடிக்கொள்ளாதீர்கள். தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தக்கதாக நேபுகாத்நேச்சர் வழியிலே போகாதீர்கள். மற்ற அந்த வித்தியாசமான பாதைகளின் விதங்களில், வழிகளில் அனேகம் அனேகங்களை கூறலாம். அவைகளில் போகாதீர்கள். பரிசேயர்களைப் போன்று போகாதீர்கள், இப்பொழுது இங்கே பாருங்கள், “நாம் உயர்ந்த ஒரு ஸ்தலத்தில் இருக்கிறோம். ஒருக்கால் அங்கே ஏதாவது காரியம் நடந்து கொண்டிருந்தால் நாம் எல்லோரும் அதைக் குறித்து அறிந்திருப்போம்”. தேவன் நழுவி அங்கே வெளியே வந்து பெத்லகேம் முன்னனையில் ஒரு குழந்தையாகப் பிறந்து அவரை கீழே உலகத்திற்குக் கொண்டு சென்றார். உலகத்திலிருந்து கடுமையான தண்டனையினால் உலகத்திலிருந்து வெளியே சென்றார். அதைக்குறித்து அவர்கள் ஒன்றும் அறியாது இருந்தார்கள். அது உண்மை , தேவனால் அளிக்கப்பட்ட பாதை. 69ஓ, ஒரு சமயம் அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள் அவள் தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் செலவழித்துவிட்டாள் அல்லேலூயா! வைத்தியர்களால் அவளுக்கு எந்த நன்மையும் செய்யமுடியவில்லை. ஒருநாள் அவள் மயங்கும் அளவிற்கு ஆகிவிட்டது. அனேக அனேக வருஷங்களாக அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது. ஒருநாள் அவள் ஏதோ ஒரு உரத்த சத்தத்தைக் கேட்டாள். அவள் வெளியே எட்டிப்பார்த்தாள், அங்கே தேவனுடைய அளிக்கப்பட்ட பாதை வந்து நின்றது. அதுசரி. ஓ, என்னே ! அவள் உயர்தரமான பாப்டிஸ்களினுடே வருவதை என்னால் காண முடிகிறது. “அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டதாய் இருக்கிறது”, அவர்களுடைய கால்களுக்கு இடையே அவள் நகர்ந்து சென்றாள் அவர்கள் அசைந்து முன்னே போகவேண்டியதாய் இருந்தது. அவள் பிரிஹாம் மற்றும் அவருடைய எல்லா மனைவிகளிடத்திலும் வருவதை என்னால் காணமுடிகிறது, அப்படியே அவள் நேராக ஊடாகச் சென்றாள். அவள் என்ன கூறினாள்? 70அவர்கள் அங்கே, “மார்த்தாளே நீ எங்கே போகின்றாய் வைத்தியர்களே ஒன்றும் முடியாது என்று கூறிவிட்டார்களே? அப்படியானால் நீ எங்கே போகப் போகின்றாய், நான் உன்னை அங்கே உதிரப்போக்குடன் கண்டேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது...? (ஆசிரியை) அதற்கு அவள் “நான் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையிலே போகின்றேன்” என்று கூறினாள். “அது எங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறானே ஒரு மாய்மாலக்காரன் அவனைச் சொல்லவில்லையே” என்றார்கள். அவள் அதற்கு அந்த இடத்திற்குத்தான் நான் போகிறேன், நான் நேராக உள்ளே போகப்போகிறேன் என்றாள். அவள் நெருக்கிக்கொண்டு ஊடாகவும் சுற்றிக்கொண்டும், இந்த நபர் இருக்கும் இடம் மட்டுமாய் அவள் சென்றாள். அவர் அந்த விதமான சபையைச் சேர்ந்தவர் இது அது என்று அவர்கள் எல்லாரும் அவளைப் பின்னால் தள்ள முயற்சித்தார்கள். ஆனால் அவளோ இயேசுவை நோக்கிச் சென்றடைந்தாள். அவர்களில் சிலர் இப்பொழுது சகோதரியே ஒரு நிமிடம் பொறுங்கள் நீங்கள் இறைச்சி புசித்தால் உங்களால் அதைச் செய்ய முடியாது என்றார்கள். அவளோ தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தாள். “நீங்கள் சர்ப்பங்களை எடுக்காதிருந்தால் உங்களால் அதைச் செய்ய முடியாது” என்றார்கள். அவள் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து சென்றாள். அவள் இயேசுவண்டை போகவேண்டும் என்றிருந்தாள் அது உண்மை. 71நான் பண்டைய தாவீதைக் குறித்து நினைக்கிறேன் அல்லேலூயா ஆம், ஐயா. அங்கே இருக்கின்றதைக் குறித்து அவன் கூறினபோது, அதைக்குறித்து அவன் அங்கே பேசினான். அவன், “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அது கன்மலையின் தேனைப்போல் இருக்கும்” என்று சொன்னான். நான் ஒரு பழைய சிறிய விவரனத்தை வழக்கமாய் உபயோகிப்பதுண்டு. அவனுடைய பக்கவாட்டில் இங்கே அவர்கள் ஒரு கைப்பையை ஒரு சிறு பையில் அவர்கள் தேனை ஊற்றிக்கொண்டு போவார்கள். பழைய மேய்ப்பர்கள் அதைச் செய்வார்கள், அதைக் குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன். ஆடுகளெல்லாம் சுகவீனமாய் ஆகிவிடும் அப்பொழுது அவர்கள் சிறிது தேனை எடுத்து அதைச் சுண்ணாம்புக் கல்லான பாறையில் மேல் பூசுவார்கள், அந்த சுகவீனமான ஆட்டை அழைத்து அந்த பாறையை நக்கும்படி செய்வார்கள். அவைகள் போய் அந்த பாறையிலிருந்து தேனை நக்கி எடுக்கும் பொழுது அந்த சுண்ணாம்பு சத்தையும் சேர்த்து நக்கிவிடும், என்ன சம்பவிக்குமென்று உங்களுக்கு தெரியுமா? சுகவீனமான ஆடு சுகமாகிவிடும். 72இப்பொழுது சகோதரனே இங்கே பாருங்கள் இன்றிரவு ஒரு கைப்பை நிறைய நான் வைத்திருக்கிறேன். நான் ஒன்றும் அதை பாப்டிஸ்டு சபை மேலோ, மெத்தோடிஸ்டு சபை மேலோ, பிரஸ்பிடேரியன் சபை மேலோ அல்லது பெந்தெகொஸ்தே சபை மேலோ போடப்போகிறது இல்லை. நான் அதை கிறிஸ்து இயேசுவின் மேல் போடுவேன். அங்கே தான் அது இருக்க வேண்டும். சுகவீன ஆடாகிய நீங்கள் அதை நக்கத் துவங்குங்கள். அதிலிருந்து நிச்சயமாய் ஏதாவது காரியம் கிடைக்கும், ஆம் ஐயா. அவர் மேல் நக்குங்கள், அந்த வயதான மனிதனைப் போன்று அடக்கம் பண்ணப்பட்டு அவர்மேல் நக்குங்கள். உங்களுக்கு அது கிடைக்கும். உங்கள் சபை என்ன சொல்லுகிறதோ அதற்கு நீங்கள் எந்த கவனமும் செலுத்தாதீர்கள், கிறிஸ்துவிற்கு கவனம் செலுத்துங்கள். அவரைப் பின்பற்றுங்கள் ஏனென்றால் அவருக்குள் அவரே சபையாய் இருக்கிறார். நான் காண்கிறேன் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையில் செல்லுங்கள், அவர் ஒருபோதும் மெத்தோடிஸ்டு தேவனுடைய அளிக்கப்பட்ட வழி என்று கூறவில்லை, பாப்டிஸ்டுகளின் அந்த வழியாய் இருந்தார்கள் என்றும் கூறவில்லை அல்லது மற்ற எந்த சபையும் கூறவில்லை . அவர், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்றார். நீங்களோ, “நல்லது, நான் அவருக்குள் இருக்கிறேனென்று எப்படி நான் அறியமுடியும்” என்கிறீர்கள். ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம் 1 கொரிந்தியர் 12 அது உண்மை . தேவனுடையதற்கு கட்டப்பட்டிருக்கிறோம். 73அவருடைய இராஜ்ஜியத்தில் அவர் உடையவராய் இருக்கிற எல்லாக் காரியங்களும் நமக்கு சொந்தமானது, ஒரு பெரிய காசோலைகள் நிறைந்த முழுமையான புத்தகத்தை அவர் எடுத்து அவைகளின் கீழாக அவருடைய பெயரைக் கையெழுத்திட்டு “இதோ இருக்கிறது என் மகனே உனக்கு என்ன தேவையாயிருந்தாலும் நீ அதைப் பெற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஆமென். அதை நிரப்ப நீங்கள் பயப்பட வேண்டாம். அதை நிரப்பி கர்த்தாவே உமக்கு நன்றி என்று அவரிடம் கொடுங்கள். அல்லேலூயா! அது நிறைவேறுதலுக்கு வரும் எந்தக் காரியங்களையெல்லாம் நீங்கள் வாஞ்சிக்கின்றீர்களோ (மாற்கு 11:24) நீங்கள் விசுவாசத்தோடு ஜெபம் பண்ணும்போது அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். 74காசோலைகளில் கையெழுத்திட்டு “கர்த்தாவே, எனக்கு சுகம் தேவையாய் இருக்கிறது” என்று கூறுங்கள். அதை கிழித்தெடுத்து “அங்கே நீர் இருக்கிறீர் கர்த்தாவே, சுகத்துக்காக இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன்” என்று கூறுங்கள். கர்த்தாவே உமக்கு நன்றி என்று கூறி தொடர்ந்து நடந்து செல்லுங்கள். சுகத்திற்காக விசுவாசியுங்கள், அதுசரியே. அந்த காகங்கள் ஆகாரங்களை எலியாவிற்குக் கீழே கொண்டு வந்தது போல அது நேராக திரும்பி வருகிறது அதோ அது இருக்கிறது. “என்னுடைய ஆத்துமாவிற்கு எனக்கு இரட்சிப்புத் தேவையாய் இருக்கிறது” என்று கூறுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். வெறுமனே அதில் எழுதி, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறியிருக்கிறது. கர்த்தாவே அது எனக்காகத்தான் என்று கூறுங்கள். காசோலையை நிரப்புங்கள் “ எனக்கு இரட்சிப்பு தேவை கர்த்தாவே அதை என்னிடத்தில் கொடும்” என்று கூறுங்கள். அவர் இதோ அது இருக்கிறது என்றார். கர்த்தாவே உமக்கு நன்றி என்று கூறுங்கள். அதோடு கூட நடந்து போய்விடுங்கள். பரிசுத்த ஆவி உங்களுக்கு தேவையா? ஆம், ஐயா. நீங்களோ உன்னதத்தில் இருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? காசோலையை நிரப்பி கையெழுத்திட்டு உயரே அனுப்புங்கள், என்ன சம்பவிக்கப் போகிறதென்று பாருங்கள். தேவன் அதைத் தந்தருளுவார். அது தேவனுடைய அளிக்கப்பட்ட பாதை. அவர் உங்களுக்கு ஒரு காசோலை புத்தகத்தைக் கொடுத்தார். போய் அதை நிரப்புங்கள். தேவன் அதை வாக்களித்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக தேவன் எப்பொழுதும் அளிக்கப்பட்ட பாதையை உடையவராய் இருக்கிறார். 75ஒரு நாளில் யவீரு என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய பழைய நபர் இருந்தார். ஓ, அவன் ஒருவிதமாக ஏதோ ஒரு கூட்ட அவிசுவாசிகளோடு போய் சேர்ந்து கொண்டான். ஒரு மூலக்கூட்ட பிரசங்கியார்களைப் போன்று. அதேவிதமாக இன்றைக்கு இவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவிசுவாசிகள் மத்தியில் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்று வேதம் கூறுகிறது. சரி, நீங்கள் அறிந்திருக்கிற முதலாவது காரியம். யார் அதை சொல்லியிருப்பார்கள் என்று வியக்கிறேன். நீங்களா? 76நல்லது, வேதாகமம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று கூறுகிறது. நீங்கள் இன்றைக்கு பாதி சபைகளில் அதைப் பிரசங்கியுங்கள், அவர்கள் கதவிற்கு வெளியே உங்களை உதைத்துத் தள்ளுவார்கள், அது சரியே! அது உண்மை. தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையை அவர்கள் அறியார்கள். ஆனால் அவர் சொன்னது அதுதான் அதைத்தான் இயேசு சொன்னார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. பின்னர் அவர் அப்படி சொல்லியிருப்பாரானால் “ஆமென். நான் அதை விசுவாசிக்கிறேன், அது சத்தியம்” என்று நான் நினைக்கிறேன். அவருடைய வழியில் நான் நடக்கிறேன். அவர் கூறினதையே நான் செய்கிறேன், தொடர்ந்து வரும் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் அவர் அதை உறுதிப்படுத்துகிறார். அது உண்மை 77எனவே அதே காரியத்தை செய்து நடந்து உள்ளே செல்லுங்கள், அதுதானே ஒவ்வொருவருக்கும்... சித்தமாய் இருக்கின்ற யாவரும் உள்ளே வரட்டும். வாருங்கள் தேவன் உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள் வந்தாக வேண்டும். எனவே நேராக உள்ளே வாருங்கள் இனியும் காத்திருக்க வேண்டாம். இன்றிரவே அதை எடுங்கள். இந்த சிறிய நபரை பாருங்கள், அவன் தானே சேர்ந்து கொண்டான். அவன் இயேசுவை நேசித்தான், அப்படியிருந்தும் அவன் ஒருவிதமான வழியிலே ... அவனுடைய கெளரவத்தை அவர் இழக்கவிரும்பவில்லை. உங்களுக்குத் தெரியும் ஆசீர்வாதங்களை எனவே அவர்கள் வெளியே வந்தார்கள்... எனவே கர்த்தர், “அங்கே இருக்கின்ற அந்த வயதான நபரைப்பார், நான் அவரை நித்திய ஜீவனுக்கு முன் குறித்தேன். அவனோ அங்கே அந்த அவிசுவாசிகளின் குழுவில் இருக்கின்றான். ஆகையினால் நான் அவனுக்கு சரியாய் செய்கிறேன்” என்றார். அவனுடைய குமாரத்தி வியாதிப் படும்படி அனுமதிக்கிறார் அவன், “நல்லது, நான் டாக்டர் டோவை அழைப்பேன்” என்றான். டாக்டர் டோ வந்து அவளைப் பார்த்தார் அவர், “யவீருவே நாடித்துடிப்பு குறைந்து கொண்டே போகிறது, எதைச் செய்தால் மேலாக இருக்குமோ இதை அதை நாம் செய்வோம். அவர் அவளுக்கு எல்லா மருந்துகள் முதலானவற்றைக் கொடுத்தார். அவள் அப்படியே தொடர்ந்து மரித்துக் கொண்டிருந்தாள். பின்னர் அவன் தேவனிடத்தில் ஒரு அளிக்கப்பட்ட வழி இருக்கிறதா என்று வியக்கிறேன் என்றான். ஓ, என்னே ! 78தெய்வீக சுகத்தைக் குறித்து அவன் அவ்வளவாய் குறை கூறினவனாக இருந்தான். அந்த மனிதன் அல்லது அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தான்... ஆம், ஆம், ம்ம் என்று கூறினான். அவன், “யவீருவே அவன் ஒரு மாய்மாலக்காரன், என்று நீ நினைக்கிறாயா?” “இல்லை, அவர் மாய்மாலக்காரன் அல்ல. நீ அவரில் விசுவாசமாயிரு” என்று பரிசுத்த ஆவி கூறினது. “ஓ, சரி ஆம். ஓ, அப்படி இருக்கிறார் என்று நான் - நான் - நான் யூகிக்கிறேன்” 79பாருங்கள். இந்த சில எல்லைக்கோடு பிரசங்கிகள் அந்தவிதமாகத்தான் இருக்கிறார்கள், (அது உண்மை ) பயப்படுகிறார்கள், ஓ உன்னிடத்திலிருந்து கவ எலும்பை தேவன் எடுத்துப்போட்டு உனக்குள் ஒரு முதுகெலும்பை வைப்பாராக. படி. ராபின்சன் சாட்சி என்னவாயிருக்கிறது என்பதை நான் விரும்புகிறேன். அவர், “கர்த்தாவே மரம் அறுக்கும் ரம்பத்தின் அளவான ஒரு முதுகெலும்பை எனக்குத் தாரும், என்னுடைய ஆத்துமாவின் இருபுறமும் சரிந்த கூரையின் முடிவில் அதிகமான சத்தத்தைப் போடும், அதில் ஒரு பல் இருக்கும் வரைக்கும் நான் பிசாசோடு போராடி அதன்பின்னர் நான் மரிக்கும் வரைக்கும் அவனை கோந்து பூசி ஒட்டிவிடுவேன்” என்று அவர் கூறினார். எனக்கு அது பிடிக்கும், அது உண்மை . அவன், “என்னிடத்தில் ஒரு கூன் நாயிருந்தது அது வயதாகி மரித்துப் போனது அந்த கூன் நாய்க்கு ஒரு பல் இல்லாமல் போகும் வரைக்கும், அது கூன் மிருங்கங்களோடு சண்டையிடும். அதன்பின்னர் அவைகளை அப்படி அழுத்திக்கொண்டு சத்தமிடும்” என்று கூறினான். எனக்கு அது பிடிக்கும் உண்மை அல்லேலூயா! 80நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம் எனக்குக் கல்வியறிவே கிடையாது. நான் மிகவும் சிறியவன், பிரசங்கிமார்கள் என்னை புறக்கணித்துப் போடுவார்கள்” என்று சொல்லலாம். நாம் திரும்பி கதைக்குப் போவோமாக. “அது சண்டையில் ஈடுபட்டிருக்கிற. நாயினுடைய அளவை பொறுத்தது அல்ல, அது அந்த நாயினிடத்தில் உள்ள சண்டையின் அளவைப் பொறுத்ததாய்” இருக்கிறது. இன்றைக்கு அது அப்படியாகத்தான் இருக்கிறது. இங்கே எழும்பி நில்லுங்கள், எப்படியிருந்தாலும் இன்றைக்கு நீங்கள், அந்த நாய் அங்கே நின்று கொண்டிருக்கிறதைக் காண்பீர்கள். 81அந்த வயதான தலைவன் போவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் “தலைவரே நீர் எப்படி இருந்து கொண்டிருக்கிறீர்” என்று கூறினார். அவன் “எனக்குள் இரண்டு நாய்கள் இருக்கின்றது. ஒன்று கருப்பாய் இருக்கிறது மற்றொன்று வெள்ளையாய் இருக்கிறது. கருத்ததோ நான் தவறு செய்யும்படி விரும்புகிறது. வெள்ளையோ நான் சரியானதைச் செய்யும்படி விரும்புகிறது. அவைகள் எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டும், சச்சரவு செய்துகொண்டும் இருக்கிறது” என்றான். நான், “தலைவரே இரண்டில் எது ஜெயிக்கும்” என்றேன். அதற்கு அவர், “எதற்கு அதிக போஷாக்கு கிடைக்கிறதோ அதைப் பொறுத்தது” என்றார். 82அதுவும்கூட ஏறக்குறைய சரியாக இருக்கிறது. ஆம் ஐயா சரி. சகோதரனே நான் உனக்கு சொல்லுகிறேன், இன்றிரவு உலகத்திற்கு என்ன தேவையாய் இருக்கிறதென்றால், ஒரு நல்ல பழைய மாதிரியான குலுக்குதலே தேவை, 83யவீரு, “இப்பொழுது ஒரு நிமிடம் பொறு” மகளுக்கு மிகுதியான சுகவீனம் அவளை திருப்பிக் கொண்டுவர அங்கே இருக்கின்ற ஒரே நம்பிக்கை இயேசுவிடம் போவது மட்டுமே. அவன்... அவர்கள் நேராக இயேசுவினிடம் சென்றனர், அவன் வீதியிலே போய்க்கொண்டிருக்கையிலே... அவன் அங்கு வருகிறதை நான் காண்கிறேன். உதிரப்போக்குள்ள ஸ்திரீ அப்பொழுதுதான் சுகமாக்கப்பட்டாள், இதோ அவன் போய் அவரிடத்தில், “என் மகள் இப்போது படுத்துக்கிடக்கிறாள்... ஆசாரியன் இப்போது என்ன கூறுகிறான். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை . நீர் வந்து உம்முடைய கரங்களை அவள் மீது வைப்பீரா? சுகத்திற்கு நீர் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையென்று நான் விசுவாசிக்கிறேன். நீர் வருவீரா, உம்முடைய கரங்களை அவள் மேல் வையும் அவள் சுகமடைவாள்” என்றான். அவர், “நான் வருகிறேன்” என்றார். இதோ அவன் புறப்பட்டு போய்க்கொண்டே இருக்கிறான், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, இதோ ஒரு மனிதன் வீட்டிலிருந்து ஓடிவந்து “யவீருவே ஆண்டவரைத் தொந்தரவு செய்யாதே ஏனென்றால் உம்முடைய மகள் ஏற்கனவே மரித்து விட்டாள்” என்றான். ஓ, ஓ, என்னே! அவனுடைய சிறிய இருதயம் அவனுக்குள்ளாக அந்த விதமாக குதிக்கின்றதை என்னால் காணமுடிகிறது. அந்த அன்புள்ள மிருதுவான இயேசுவினுடைய கண்கள் அப்படியே உருண்டு அவன் பக்கமாகத் திரும்பி, “நான் உனக்குச் சொல்லவில்லையா, பயப்படாதே நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்றார். அவர் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறார். 84குருடனான பர்த்திமேயு என்னும் பெயர் கொண்ட ஒரு வயதான மனிதன் அங்கே இருந்தான். வாசலிலே உட்கார்ந்துகொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான், அக்டோபர் மாத நெருக்கத்தில் அங்கே குளிர்காலமாய் இருந்தது. வீதி வழியாக ஏதோ சத்தம் வந்து கொண்டிருக்கிறதை அவன் கேட்டு, “அது என்ன சத்தம்” என்றான், அதற்கு, “அதுவா நசரேயனாகிய இயேசு” என்றார்கள். அவன் எதையும் கவனிக்கவில்லை, அவனுடைய மேல் அங்கியை வெளியே உருவினான் அவன் அதை அப்படியே எடுத்து மடித்துக் கீழே வைக்கவில்லை, அவன் குருட்டுத்தனமாகவே அதனன்டைக்குப் போக முடியும். என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவன் தன் அங்கியை தூக்கி எறிந்தான். தேவன் ஒரு பாதையை அளித்திருந்தார். அவன் அந்தப் பாதையைப் பின் தொடர்ந்தான். அவன் அங்கே ஓடிவந்தான். சிலர், “கீழே உட்காரு, கீழே உட்காரு, கீழே உட்காரு, அவருக்கு உன்னோடு வீணாக்க நேரமே கிடையாது” என்றார்கள். அவனோ இன்னும் அதிகமாய், “இயேசுவே, தாவீதின் குமாரனே என்மேல் இரக்கமாயிரும், என் மேல் இரக்கமாயிரும்” என்று கூச்சலிட்டான். அவன் அழுத்தி தள்ளிக்கொண்டும் “ என்மேல் இரக்கமாயிரும் என்னுடைய கண்களுக்கு நீர் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையாய் இருக்கிறீர் என்று நான் அறிவேன். ஓ, கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்” என்றான். அது உண்மை . 85ஒருநாள் குருடனான பர்த்திமேயுவின் சரித்திரத்தை ஒரு சிறு கதையை நான் வாசித்தேன். அவன் அனேக வருஷங்களாக குருடாய் இருந்தான் என்று அவர்கள் கூறினார்கள். அவன் ஒருபோதும் கண்டிராத ஒரு மகள் அவனுக்கு இருந்தாள். ஒரு இரவு அவன் வழக்கமாக நடந்து போய் அங்கே வீதியில் உட்கார்ந்து கொள்வான். அவன் சிறிய ஆட்டுக்குட்டியை வைத்திருந்தான் இந்நாட்களில் நாய்கள் குருடரை வழிநடத்திப் போவதைப் போன்று, ஆட்டுக்குட்டிகள் வழக்கமாக குருடர்களை வழி நடத்தும். நாய்கள் குருடான மனிதரை வழிநடத்திக் கொண்டு போகும், அவர்கள் ஆட்டுக்குட்டிக்கு பயிற்சியளித்துக் குருடரை வழிநடத்தும்படி வைத்திருந்தார்கள். அப்போது ஒருவன் ஒரு நாளிலே அது என்றான். அவனிடத்தில் இரண்டு மணிப்புறாக்கள் இருந்தது. அவைகள் சிறிது பல்டிகள் அடிக்கும், அதைப்போன்று எதையோ செய்து எருசலேமிற்கு அல்லது பட்டணத்திற்குப் போகின்ற யாத்திரீகர்களின் கவனத்தைக் கவர்ச்சிக்கும் அவர்கள் சில்லரைக் காசுகளை அவன் கோப்பையில் போடுவார்கள். அவன் குருடனாய் இருந்தான். ஆக ஒரு இரவு அவனுடைய மனைவி மிகவும் சுகவீனமானாள், எனவே அவன் கர்த்தரிடத்திற்குப் போனான், அவன், “கர்த்தாவே என்னிடத்தில் ஒன்றும் இல்லை, ஆனால் கர்த்தாவே நான் உம்மை விசுவாசிக்கிறேன் நீர் இரக்கம் பாராட்டி என்னுடைய மனைவியை உயிர்ப்பிக்கும்படி செய்தால் நாளைக்கு என்னுடைய மணிபுறாக்களை ஒரு பலியாக உமக்குக் கொடுப்பேன்” எனக்கூறினான். அந்த இரவே கர்த்தர் அவனுடைய மனைவியை சுகப்படுத்தினார். அடுத்த நாள் அவன் திரும்பிப் போய் ஒரு ஆசாரியன் மூலமாய் அந்த இரண்டு மணிபுறாக்களையும் ஒரு பலியாகச் செலுத்தினான். அதன்பின்னர் அந்த ஆட்டுக்குட்டியைத் தவிர அவனிடத்தில் வேறொன்றுமில்லை. 86அதற்கு அதிக நாட்கள் பின்பல்ல அவனுடைய சிறிய மகள் வியாதியானாள். வைத்தியர்களால் அவளுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன், “கர்த்தாவே இன்னும் ஒரு காரியம்தான் மீந்திருக்கிறது அது ஆட்டுக்குட்டிதான். ஆனால் நான் ஒருபோதும் பார்த்திராத என் சிறு மகளை நீர் சுகமாகும்படி செய்வீரானால், நான் என்னுடைய ஆட்டுக்குட்டியை ஒரு பலியாக உமக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினான். பின்னர் கர்த்தர் அவனுடைய சிறு பெண்ணை சுகப்படுத்தினார். அதற்கு ஒரு சில நாட்கள் கழித்து அந்த ஆட்டுக்குட்டி அவனை வழிநடத்த அவன் வீதியிலே போகத்துவங்கினான் பிரதான ஆசாரியனான காய்பா வந்து, “குருடனான பர்த்திமேயுவே நீ எங்கே போகின்றாய்” என்றான். அவன், “ஓ, பிரதான ஆசாரியரே நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆட்டுக்குட்டி என்னை தேவாலயத்திற்கு வழிநடத்திக் கொண்டு போகிறது. ஆட்டுக்குட்டியை ஒரு பலியாக செலுத்தப்போகிறேன்” என்று கூறினான் ஆசாரியன், “ஓ, நீ அதைச் செய்யக்கூடாது” என்றான். அதற்கு பர்த்திமேயு, “செய்வேன்” என்றான். ஆசாரியன், “இங்கே பார் ஒரு ஆட்டுக்குட்டியின் கிரயத்தை நான் உனக்குக் கொடுக்கிறேன், நீ போய் ஒன்றை வாங்கிக்கொள்” என்றான். அதற்கு அவன், “நான் தேவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை ஒருபோதும் வாக்களிக்கவில்லை, நான் அவருக்கு இந்த ஆட்டுக்குட்டியைத் தான் வாக்களித்தேன். இந்த ஆட்டுக்குட்டியை” என்றான். அதற்கு அவன், “குருடனான பர்த்திமேயுவே நீ அந்த ஆட்டுக்குட்டியைக் கொண்டுபோகக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டி உன்னுடைய கண்களாய் இருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டி இல்லாமல் உன்னால் காணமுடியாது. அந்த ஆட்டுக்குட்டி உன்னை வழிநடத்துகிறது. குருடனான பர்த்திமேயுவே, நீ, அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்தக் கூடாது” என்றான். அந்த வயதான மனிதன் சற்று நடுங்கினவனாய், “ஓ, பிரதான ஆசாரியரே குருடனான பர்த்திமேயுவின் கண்களுக்கு தேவன் ஒரு ஆட்டுக்குட்டியை அளிப்பார்” என்று கூறினான். தேவன் அவனுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அவர் வருகிறாரென்று அவன் கேள்விபட்ட பொழுது தேவன் ஒரு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை உடையவராய் இருந்தார். அவர் அங்கே இருக்கிறார். 87இன்று இரவு, அவர் தாமே தேவனுடைய அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். நம்முடைய கண்களுக்காக உங்களுடைய ஆவிக்குரிய கண்களுக்காக அவர் தாமே நம்முடைய ஆத்துமாவுக்கு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். நரகத்தில் இருந்து நீ தப்பித்துக்கொள்ளததாக அவர் அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். பரலோகத்தில் உன்னுடைய மகிமைக்காக அவர் அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். “ஜெபிக்கையிலே நம்முடைய தலைகள் வணங்கி இருக்கையிலே அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” 88ஓ, தேவனாகிய கர்த்தாவே, வானங்கள் பூமி இவைகளின் சிருஷ்டி கர்த்தரே, நித்தியஜீவனின் பிறப்பிடமே எல்லா நன்மையான வரத்தைத் தருபவரே இந்த ஜனங்களின் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களையும் அனுப்பும். இந்த பாவம் சிறிய காரியங்கள் அவர்கள் குறிப்புகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்கள் கர்த்தாவே ஆனால், நீர் ஒரு அளிக்கப்பட்ட வழியை உடையவராய் இருக்கிறீர் என்று நான் அறிவேன். நோவாவின் நாட்கள் இருந்தது போலவே மனுஷகுமாரன் வரும் நாட்களில் இருக்கும் என்று கூறினீர். ஒரு ஆயத்தப்படுதலின் நேரம் கோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கு ஒரு ஸ்தலம் ஆயத்தம் பண்ணப்படவேண்டியதாய் இருக்கிறது. அந்தக் குருடனான மனிதனின் கண்களுக்காக அல்லது உதிரப்போக்கு இருந்த அந்த ஸ்திரீயின் உதிரப்போக்கை நிறுத்துவதற்காக அளிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியை மரித்துப்போன லாசருக்காக அளிக்கப்பட்டிருந்த அந்த ஆட்டுக் குட்டியை, இங்கே இப்பொழுதே இருக்கும்படி தேவனே நான் ஜெபிக்கிறேன். தேவனே இரக்கமாயிரும். அதைக்குறித்து நான் சிந்திக்கும் பொழுது ஒருநாள் அன்று அதே ஆட்டுக்குட்டிதான் என்னுடைய கண்களுக்காக அளிக்கப்பட்டதாய் இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் மேயோ சகோதரர்கள் மீண்டும் சுகமாக ஆவதற்கு எனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையென்று என்னிடத்தில் கூறினபொழுது, தேவன் ஒரு ஆட்டுக்குட்டியை அளித்தார் 89அங்கே கிரீன் அண்டை நீர் உம்முடைய தூதனை அனுப்பி, “போ இதைச் செய்” என்று கூறின்போது, “நாத்திகர்களும், அவிசுவாசிகளுமான ஒரு மகத்தான உலகத்திற்கு முன்பாக என்னால் எப்படிச் செய்ய முடியும்” என்று கூறினேன். ஆனால் தேவனோ ஒரு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை கொடுத்திருந்தார். தேவனே இங்கே இருக்கும் என்னுடைய சிறிய சபையை நான் நோக்கிப்பார்க்கின்ற போது, நான் அனேகம் அனேகம் ஆயிரக்கணக்கான மைல்கள் கடலின் ஊடாக உறைந்து போன நிலப்பரப்பையும் மகத்தான பனிக்கட்டிகளையும் நான் நினைக்கிறேன். எப்படியாய் நான் அங்கே உட்கார்ந்து அனேக முறைகள் ஒரு தனிமையான அறையில் ஜெபித்துக்கொண்டிருந்தேன், அவர்கள் இங்கே வந்து என்னுடைய கரத்தைக் குலுக்குவார்கள் என்பதைக் குறித்து அனேக முறைகள் சிந்திக்கிறேன். அந்த பழைய மரத்தூள் தரையிலே பரம்பிவிழவும் காற்று அடிக்கும் பொழுது ஜன்னல்கள் அசைந்தன 90என்னுடைய அன்பார்ந்த மனைவியைக் கொண்டுவந்து சிலுவையின் பாதத்தண்டையில் இங்கே அவளைக் கிடத்தி அவளுடைய அடக்கத்தைப் பிரசங்கிக்கலாம் என்று நினைக்கிறேன். அவளுடைய கரங்களில் வைக்கப்பட்ட என்னுடைய சிறிய குழந்தையை, கர்த்தாவே பார்த்தது நினைவிருக்கிறது. ஒருசில மணிநேரங்களுக்கு முன்னர் நீர் பரிசுத்த ஆவியினால் நிரப்பின சிறிய பில்லிபாலை எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலையில் ஈஸ்டர் மலரை அங்கே வைக்கும்படி கல்லறைக்கு வரும் பொழுது அவன் அழ ஆரம்பித்தான். நான் அந்த சிறு பையனின் மேல் கரங்களைப் போட்டு, “தேவன் ஒரு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை, ஒரு பாவ நிவாரண பலியையும் உடையவராய் இருக்கிறார். என்றோ ஒரு நாள் இந்த சிறிய கல்லறை திறக்கும் அம்மா வெளியே வருவார்கள் அவ்வண்ணமே உன்னுடைய சகோதரியும் வருவாள். தேவன் ஒரு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை உடையவராய் இருக்கிறார்” என்று கூறினேன். 91இந்த சில நாட்களில் தேவன் என்னுடைய கடைசி பிரசங்கம் பிரசங்கிக்கிற பொழுது என்னை ஒருக்கால் வெளியே ஒரு அறையில் கிடத்தலாம், என்னுடைய நாடித்துடிப்பு என்கரங்களில் மேல் ஏறி வருவதை நான் உணரலாம். முழுமையான மரண அலை என்னுடைய அறைக்குள் ஜன்னல் திறக்கப்படுகையிலே மிதந்து கொண்டிருக்க, ஜன்னல் திரைகள் ஊசலாடலாம். அப்பொழுது கர்த்தாவே ஜீவப் படகை வெளியே தூக்கி எறியும். நான் எனது கடைசி யாத்திரையை செய்வேன். நான் அப்படியே துப்பட்டியை விரிப்பேன். மூடியானது மூடிக்கொள்ளும். துப்பட்டியானது என்னை மூடிக்கொள்ளும். நான் மரண இருளின் பள்ளதாக்குக்கு நடந்து போக விரும்புகிறேன். நான் யோர்தான் அண்டைக்கு வந்து என்னுடைய வழியில் இருந்து பரவலாய்ப் போக, “யோர்தானே வழிவிடு கடந்து போவேன்” என்று சத்தமிடுவேன், கர்த்தாவே அப்பொழுது ஜீவப் படகை என் பக்கமாகத் தள்ளிவிடும். 'என்னை ஏற்றுக்கொள்ளும், ஏற்றுக்கொள்வீராக கர்த்தாவே! என்னை மட்டுமல்ல ஆனால் இங்கே உள்ளே இருக்கின்ற ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார்களாக. ஏற்றுக்கொள்வீரா கர்த்தாவே! அதையளியும். அது முதற்கொண்டு எங்களில் அனேகர் கடந்து சென்று பரதீசுக்கு திரும்பிச் சென்று பின்னர் என்றென்றைக்குமாய் ஜீவிப்பார்களாக“. “பிதாவே இன்றிரவு இங்கே இருந்து உம்மை அறியாமலும், ஒருபோதும் மறுபடியும் பிறவாமலும் தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையைக் கண்டுபிடிக்காமலிருக்கிற புருஷனோ அல்லது ஸ்திரீயோ இங்கே இருந்தால் நாங்கள் ஜெபிக்கையிலே அவர்கள் கண்டுபிடிப்பார்களாக, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்”. 92உங்கள் தலைகளை வணங்கி இருக்க என்னுடைய பாவியான நண்பனே! தேவன் உன்னுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அனேகர் உள்ளே அல்லது வெளியே இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். தேவனிடத்தில் போகும் வழியை தேவனுடைய அளிக்கப்பட்ட பாதையை நீங்கள் எப்பொழுதாவது ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா? அதை மதிப்பிட உங்களால் அங்கே ஒன்றும் செய்ய முடியாது. தேவன் அதை உங்களுக்காக அளித்திருக்கிறார். நீங்கள் வந்து அதை ஏற்றுக்கொள்வீர்களா? இன்றிரவு நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இங்கே ஒரு பாவியான நண்பன் இருப்பானேயானால் கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபியுங்கள் என்னுடைய ஜீவியத்தில் தேவனுடைய அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி எனக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்”. “பீடத்து அழைப்பிற்குப் பிறகு பீடத்தைச் சுற்றி நிற்க இங்கே நமக்கு இடமில்லை. அங்கே இடமில்லை. ஆகையினால் கரத்தை உயர்த்துங்கள்” என்றேன். நீ அதைச் செய்வாயா? பாவியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக உம்மை, பின்னாகப் பின்னால் மீண்டுமாய் யாராவது இருக்கிறீர்களா, இங்கே இருப்பவர்கள்? இப்பொழுது என்னுடைய வலது கை பக்கமாக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறுயாராவது கரத்தை உயர்த்தி என்னை நினைவுகூரும் என்று சொல்லுவீர்களா. ஓ, தேவனே இன்றிரவு எனக்கு கிருபையைத்தாரும். உம்முடைய செம்மறி ஆட்டுக்குட்டியின் ஜீவனைத்தாரும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரியே இங்கே நீங்கள் உட்கார்ந்து இருக்கிறதை நான் காண்கிறேன். 'வெளியே யாராவது இருக்கிறீர்களா! நடந்து வந்து உங்களுடைய கரங்களை அந்தத் திரையின் மேல் வைத்து, “சகோதரன் பிரன்ஹாம் என்னை நினைவுகூரும், எனக்கு தேவனுடைய அளிக்கப்பட்ட வழி வேண்டும்” என்று கூறுங்கள் ஆமென்.